Por Thozhil: ப்ளு சட்டை மாறனை கையெடுத்து கும்பிட்ட அசோக் செல்வன்... எல்லாம் போர் தொழிலுக்காக தான்!

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த வாரம் 9ம் தேதி வெளியானது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் போர் தொழில் ஹீரோ அசோக் செல்வன் ப்ளு சட்டை மாறனுக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியுள்ளார்.

அதற்கு ப்ளு சட்டை மாறனும் டிவிட்டரில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

ப்ளு சட்டை மாறனுக்கு நன்றி சொன்ன அசோக் செல்வன்:தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருபவர் ப்ளு சட்டை மாறன். ஒரு படம் வெளியானதும் அதை பார்க்கலாமா வேண்டாமா என இவரின் விமர்சனம் பார்த்து முடிவு செய்ய பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, லோக்கல் ஹீரோ நடித்த படம் என்றாலும் சரி ஒரே அடியில் பித்தம் தெளிய வைத்துவிடுவார் ப்ளு சட்டை மாறன்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்களையெல்லாம் பங்கம் செய்து வைத்திருந்தார். இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் திரையுலகில் பலரும் ப்ளு சட்டை மாறன் மீது கடுப்பில் தான் உள்ளனர். ப்ளு சட்டை மாறனை இறங்கி செய்ய வேண்டும் என கெளதம் மேனன் சொல்லும் அளவிற்கு படங்களை பஞ்சராக்கி வருகிறார் ப்ளு சட்டை மாறன்.

கெளதம் மேனன் தவிர மேலும் பல திரை பிரபலங்கள் ப்ளு சட்டை மாறன் மீது கோபத்தில் இருக்க, அசோக் செல்வன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போர் தொழில் படத்துக்கு ப்ளு சட்டை மாறன் செய்த விமர்சனத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அசோக் செல்வன், அவருக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் கையெடுத்து கும்பிடும் எமோஜியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை ரீ-டிவீட் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், இன்னும் சிறந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

கடந்த வாரம் 9ம் தேதி அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில் படம் வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள போர் தொழில் மாஸ் காட்டி வருகிறது. இப்படத்திற்கு ப்ளு சட்டை மாறன் 100 சதவீதம் பாசிட்டிவான விமர்சனம் செய்திருந்தார். அதோடு மொத்த படக்குழுவினரையும் பாராட்டித் தள்ளியிருந்தார்.

 Por Thozhil: Ashok Selvan thanks Blue Sattai Maran for appreciating the film Por Thozhil movie

போர் தொழில் படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், திரைக்கதையும் வசனமும் படத்தின் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறியிருந்தார். முக்கியமாக சரத்குமார், அசோக்செல்வன் இருவரது நடிப்பும் போர் தொழில் படத்திற்கு பெரிய பாசிட்டிவ் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், படத்தில் ஒரு காட்சி கூட தேவையில்லாதது கிடையாது எனவும் பாராட்டியிருந்தார். இதற்காக தான் அசோக் செல்வன் ப்ளு சட்டை மாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X