Por Thozhil: வசூலில் புதிய சாதனை படைத்த போர் தொழில்... கொண்டாடித் தீர்த்த படக்குழுவினர்!

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

க்ரைம் திரில்லர் ஜானரில் செம்ம த்ரில்லிங்கான அனுபவம் கொடுத்ததாக ரசிகர்கள் பாசிட்டிவாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில், போர் தொழில் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதை படக்குழுவினர் கொண்டாடி தீர்த்துள்ளனர்.

Por Thozhil Movie Box Office Collection Has crossed 50 Crores Globally

வசூலில் சாதனை படைத்த போர் தொழில் :அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் கடந்த மாதம் 9ம் தேதி வெளியான திரைப்படம் போர் தொழில். இவர்களுடன் நிகிலா விமல், சரத்பாபு ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் தரமான மேக்கிங்கில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதால், பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்தது. அதனால், முதல் வார இறுதியில் 6 கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியது போர் தொழில். அதற்கடுத்த வாரங்களிலும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக தற்போதும் போர் தொழில் படத்தை திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

சைக்கோ திரில்லர் ஜானரில் அட்டகாசமான திரைக்கதையுடன் இந்தப் படம் உருவாகியிருந்தது. அடுத்தடுத்து இளம் பெண்கள் சிலர் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை தேடும் கதையை மிரட்டலாக எடுத்திருந்தார் விக்னேஷ் ராஜா. ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்து ட்விஸ்ட் கொடுத்த போர் தொழில், பாக்ஸ் ஆபிஸிலும் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது.

Por Thozhil Movie Box Office Collection Has crossed 50 Crores Globally

20 கோடி பட்ஜெட்டில் உருவான போர் தொழில் இதுவரை ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கேரளா உட்பட உலகம் முழுவதும் சேர்த்து 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம் போர் தொழில். இதனை போர் தொழில் படக்குழுவினர் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், இயக்குநர் விக்னேஷ் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போர் தொழில் படத்தின் இந்த சக்சஸ் மீட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே இந்தப் படம் ஜூலை 7ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் இப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போன ரசிகர்கள், ஓடிடியில் பார்ப்பதற்கு ரெடியாக உள்ளனர். ஆனாலும், ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X