Por Thozhil :ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போர் தொழில்.. 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!

சென்னை : நடிகர்கள் சரத்குமார், அசோக்செல்வன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் போர் தொழில்.

சீரியல் கில்லரை அடிப்படையாக வைத்து க்ரைம் திரில்லராக இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா.

மேலும் படத்தில் நிகிலா விமல், தேனப்பன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

Por Thozhil movie collects more than 3 crore rupees in just 2 days

போர் தொழில் படத்தின் 2 நாள் கலெக்ஷன்ஸ்: நடிகர்கள் சரத்குமார், அசோக்செல்வன், நிகிலா விமல், தேனப்பன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் போர் தொழில். சமீபத்தில் மறைந்த சரத்பாபுவும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சீரியல் கில்லரை அடிப்படையாக வைத்து க்ரைம் த்ரில்லாக உருவாகியுள்ள போர் தொழில் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான போர் தொழில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

சிறப்பான கதைக்களத்துடன் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே இருக்கும் என்பதற்கு இந்தப் படம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. முதல் நாளில் அந்த அளவிற்கு கவனத்தை ஈர்க்காத போர் தொழில், அன்றைய இரவிலேயே சூடு பிடிக்க ஆரம்பித்தது. நைட் ஷோவை பார்க்க அதிகமான திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகமாக கூடியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து கடந்த இரு தினங்களில் இந்தப் படம் அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

Por Thozhil movie collects more than 3 crore rupees in just 2 days

இதையடுத்து அதிகமான திரையரங்குகளில் இந்தப் படத்தை தற்போது திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் செய்யப்படாத நிலையிலும், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மூலமாகவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. அறிமுக இயக்குநராக இருந்தபோதிலும் சிறப்பான திரைக்கதை மற்றும் சீட் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும் காட்சிகள் என இயக்குநர் அதிரடி காட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் சிறப்பான படங்களாக வெளியாகியுள்ள டாடா, விடுதலை, குட்நைட் படங்களின் வரிசையில் தற்போது போர் தொழில் படமும் இணைந்துள்ளது. தொடர் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லரை கண்டுபிடிக்க லோக்கல் காவல்துறை திணறும் நிலையில், இந்த வழக்கு, சிறப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது. அங்கு எஸ்பி லோகநாதன் மற்றும் டிஎஸ்பி பிரகாஷ் இந்த வழக்கை விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா என்பதை இந்தக் கதை செல்கிறது. இந்தக் கேரக்டர்களில் முறையே சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் சிறப்பாக பொருந்துகின்றனர்.

Por Thozhil movie collects more than 3 crore rupees in just 2 days

இதனிடையே இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் கடந்த இரு தினங்களில் 3.10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் 93 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று, 2.17 கோடி ரூபாய்களை அள்ளியுள்ளது படம். படத்தின் திரையரங்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வாரயிறுதி நாளான இன்று மேலும் வசூல் அள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X