PorThozhil: OTT ரசிகர்களை மிரள வைத்த போர் தொழில்... திரையரங்குகளைத் தொடர்ந்து சோனியிலும் செம்ம மாஸ்
சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் திரைக்கதையும் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு சப்ரைஸ்ஸாக அமைந்தது.

மினிமம் பட்ஜெட்டில் உருவான போர் தொழில், பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது.
இந்நிலையில் இரண்டு மதங்களுக்குப் பின்னர் சோனி லிவ் தளத்தில் வெளியான போர் தொழில், ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஓடிடி ரசிகர்களை மிரள வைத்த போர் தொழில்: சின்ன பட்ஜெட் படங்களுக்கான ஹீரோவாக வலம் வந்த அசோக் செல்வனுக்கு, திருப்புமுனையாக அமைந்தது போர் தொழில். அசோக் செல்வனுடன் சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ஜூன் 9ம் தேதி வெளியானது. மினிமம் பட்ஜெட்டில் உருவான போர் தொழில், ரசிகர்களிடம் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றது.
முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதால், இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்தது. அதனால், முதல் வார இறுதியில் 6 கோடி ரூபாய் வரை வசூலித்த போர் தொழில். அடுத்தடுத்த நாட்களிலும் சம்பவம் செய்தது. சுமார் 50 நாட்கள் வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம், மொத்தம் 60 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
சைக்கோ திரில்லர் ஜானரில் அட்டகாசமான திரைக்கதையுடன் சஸ்பென்ஸ் நிறைந்ததாக இந்தப் படம் உருவாகியிருந்தது. அடுத்தடுத்து இளம் பெண்கள் சிலர் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை தேடும் கதையை மிரட்டலாக எடுத்திருந்தார் விக்னேஷ் ராஜா. ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களை சீட்டின் நுணியில் அமரவைத்து ட்விஸ்ட் கொடுத்த போர் தொழில், தமிழ் சினிமாவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது.
இதனால், இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், திரையரங்குகளில் தொடர்ந்து ஆதரவு கிடைத்ததால் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில், இந்த வாரம் ரஜினியின் ஜெயிலர் திரையரங்குகளில் வெளியானதால், போர் தொழில் படத்தை ஓடிடியில் வெளியிட்டது படக்குழு. அதன்படி சோனி லிவ் தளத்தில் இன்று நள்ளிரவு முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாவதால் எந்தளவிற்கு வரவேற்பு இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரையரங்குகளை விடவும் ஓடிடியிலும் தரமான வரவேற்பைப் பெற்றுள்ளது போர் தொழில். நள்ளிரவு முதல் இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் அதிகரித்துள்ளதாக ஓடிடி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வார திரை விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











