Por Thozhil Review: போர் தொழில் படத்தை பாராட்டித் தள்ளிய ப்ளு சட்டை மாறன்... நெத்தியடி விமர்சனம்!

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

மினிமம் பட்ஜெட்டில் உருவான போர் தொழில் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தை ப்ளு சட்டை மாறனும் பாராட்டி விமர்சனம் செய்துள்ளார்.

 Por Thozhil Review: Ashok Selvan Sarathkumar starrer Por Thozhil film Blue Sattai Maran Review

போர் தொழில் ப்ளு சட்டை மாறன் விமர்சனம்:
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படாத போர் தொழில் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் போர் தொழில் படத்தை பாராட்டியுள்ளார்.

திருச்சி அருகே தொடர்ந்து இளம்பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை கொலை செய்வது யார் என கண்டுபிடிக்க அனுபவம் வாய்ந்த சீனியர் போலீஸ் ஆபிஸரான சரத்குமாரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த அசோக் செல்வனும் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சீரியல் கில்லர் யார் என கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் போர் தொழில் படத்தின் கதைக்களம்.

வழக்கமான க்ரைம் திரில்லர் கதை என்றாலும், இந்தப் படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். திரைக்கதையும் வசனமும் படத்தின் முதல் காட்சியில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படிப்பறிவு மட்டுமே உள்ள அசோக் செல்வனும், அனுபவம் கொண்ட சரத்குமாரும் சேர்ந்து கொலையாளியை கண்டுபிடிப்பது சுவாரஸ்யமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 Por Thozhil Review: Ashok Selvan Sarathkumar starrer Por Thozhil film Blue Sattai Maran Review

மேலும், போர் தொழில் படத்தின் முதல் பாதி ரொம்பவே விறுவிறுப்பாக நகர்வதாகவும், அப்போதே கொலைகாரனையும் கண்டுபிடித்துவிடுவதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். ஆனால், இங்குதான் இந்தப் படத்திற்கு பிரச்சினையே ஆரம்பமானது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது என நினைத்தால், இரண்டாம் பாதியில் இன்னும் வேகமாக நகர்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், குறிப்பிட்ட ஒரு காட்சி என இல்லாமல் ஒட்டுமொத்தமாக படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. இது போர் தொழில் படத்தின் டீம்க்கு கிடைத்த வெற்றி என பாராட்டியுள்ளார். மேலும், படத்தின் கதைக்களம் 2010ம் ஆண்டு நடைபெறுவதாக இருப்பதால் நிறைய சுவாரஸ்யங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முக்கியமாக சரத்குமார், அசோக்செல்வன் இருவரது நடிப்பும் போர் தொழில் படத்திற்கு பெரிய பாசிட்டிவ் எனவும் கூறியுள்ளார். மொத்தமாக ரசிகர்களுக்கு இந்த வாரம் போர் தொழில் படம் நல்ல திரை விருந்தாக இருக்கும் எனவும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X