Por Thozhil: இதுதான் ரியல் செலப்ரேஷன்... போர் தொழில் வெற்றியை கொண்டாடிய சரத்குமார், அசோக் செல்வன்
சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள போர் தொழில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றியை சரத்குமாரும் அசோக் செல்வனும் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
போர் தொழில் சக்சஸ் மீட்:அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு ஆகியோர் நடித்துள்ள போர் தொழில் கடந்த வாரம் வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் எதிர்பாராத ஹிட் அடித்துள்ளது. முதல் நாள் கிடைத்த பாசிட்டிவான விமர்சனத்தால், அன்று மாலை முதல் செம்ம ஓபனிங் அமைந்தது.
அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் போர் தொழில் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து சம்பவம் செய்தது. அதன்படி இதுவரை 13.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். மினிமம் பட்ஜெட்டில் உருவான போர் தொழில், முதல் வாரமே செம்மையாக கலெக்ஷன் செய்துள்ளது.

இதனையடுத்து போர் தொழில் படக்குழுவினர் படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற போர் தொழில் சக்சஸ் மீட்டில், சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய அவர்கள், போர் தொழில் படத்தில் நடித்த அனுபவத்தை ஷேர் செய்தனர். மேலும், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றியும் தெரிவித்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கேக் வெட்டிய போது சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் மேடையில் ஒருவரையொருவர் ஜாலியாக கலாய்த்தும் கொண்டனர். இந்நிலையில் நேற்று வெளியான ஆதிபுருஷ், பொம்மை படங்களுக்கு பெரியளவில் ரீச் இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இந்த வாரமும் போர் தொழில் படத்துக்காக ஸ்க்ரீன்களை தியேட்டர் உரிமையாளர்கள் அதிகரித்து வருகிறார்களாம். தொடர்ந்து இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால், இனி வரும் நாட்களிலும் கலெக்ஷன் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோருடன் சரத்பாபுவின் நடிப்பும் ரசிகர்களிடம் அதிகம் பாராட்டைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











