காட்பாடியில் புறம்போக்கு ஷூட்டிங்... விஜய் சேதுபதி நடனம்!
புறம்போக்கு படத்தின் ஷூட்டிங் வேலூர் அருகே காட்பாடியில் இன்று நடந்தது.
இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாம், ஆர்யா, நடிகை கார்த்திகா ஆகியோர் நடிக்கும் புறம்போக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் ரெயில்வே கூலித் தொழிலாளி(கலாசி)யாக விஜய்சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று தொடங்கியது.
இதில் விஜய் சேதுபதி நடன குழுவினருடன் நடனமாடும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. பாபி மாஸ்டர் நடனம் அமைத்தார்.
இப்படப்பிடிப்பு 2 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. காட்பாடியில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு படப்பிடிப்பை ரசித்தனர்.
விஜய் சேதுபதிக்கு நேற்று திருமண நாள் என்பதால், ஷூட்டிங் முடிந்ததும் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











