பொன்னியின் செல்வனாக மாறிய மன்சூர் அலிகான்..ஆல்பம் விரைவில் ரிலீஸ்!
சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் எழுதி, பாடி நடித்துள்ள 'பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கனும்' இசை ஆல்பம் விரைவில் வெளியாகி உள்ளது.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
விஜய் காந்துடன் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அனைத்து மொழிகளிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மன்சூர்அலி கான்
வில்லனாக படங்களில் நடித்து வந்த மன்சூர்அலி கான் குணசித்திர நடிகராகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பார்த்தாலே மிரண்டுபோகும் அளவுக்கு பயங்கர வில்லாக நடித்த மன்சூர் அலிகான், கந்தசாமி, குலேபகாவலி, சரவணன் இருக்க பயமேன்,ஜாக்பாட், தில்லாலங்கடி ஆகிய படத்தில் காமெடியில் சும்மா பின்னி இருப்பார்.

சூப்பர் டான்சர்
நடிப்புக்காக எவ்வளவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறாரோ, அதே அளவு தனது நடனத்துக்காகவும் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். ஆட்டமா தேரோட்டமா, சக்கு சக்கு வத்திக்குச்சி, காபி தண்ணி போடட்டுமா என அவர் நடனமாடிய பாடல்களை பட்டியலிடலாம். சமீபத்தில் விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் ஹிட்டானதை அடுத்து, அந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி இன்ஸ்டகிராமில் வெளியிட்டு இருந்தார்.

ஆல்பம் பாடல்
வில்லன், காமெடி,டான்ஸ் என்று கலக்கி வந்த மன்சூர் அலிகான் பாடகராக புது அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் எழுதி, பாடி நடித்துள்ள 'பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கனும்' இசை ஆல்பம் விரைவில் வெளியாகி உள்ளது. அந்த ஆல்பட்டத்தின் மூன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல குதிரையிலும், கையில் வாளுடன் மிரட்டி உள்ளார்.

பகாசூரன் படத்தில் செம டான்ஸ்
மேலும், மன்சூர் அலிகான் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் காத்தம்மா என்ற பாடலுக்கு கலக்கலாக நடனமாடி உள்ளார். இந்த பாடலை சாம் சி.எஸ் எழுதியும் பாடியும் இருக்கிறார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறது. இந்த படத்தில் செல்வராகவன் ஒரு வித்தியாசமன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











