அரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்!
நடிகை சன்னி லியோன் அரசியல்வாதியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை சன்னி லியோன் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
ஆபாச பட உலகில் மிகவும் புகழ் பெற்றவர் சன்னி லியோன். இவர் கனடா நாட்டில் இருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்தி படங்களை தொடர்ந்து, அவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி படத்தில் அவர், இளவரசியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக குதிரையேற்றம், கத்தி சண்டை போன்ற பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அடுத்து அவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் வி.சி.வடிவுடையான் தான் இயக்குகிறார். இது குறித்து பேசிய அவர், சன்னி லியோன் அடுத்து நடிக்கும் 'டெல்லி' படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என்றும், அதில் அவர் பக்கா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











