பூனம் பாண்டேவை கைது செய்யக் கூடாது.. இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்.. அந்த விவகாரமா?

மும்பை: நடிகை பூனம் பாண்டேவை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கவர்ச்சி நடிகையாக இருந்து வந்த பூனம் பாண்டே முழு நிர்வாணமாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆபாச பட விவகாரத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகை பூனம் பாண்டே.

கைது செய்ய தடை

கைது செய்ய தடை

செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்திற்கு வந்த நடிகை பூனம் பாண்டேவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பிவி நாகரத்னா அமர்வு ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை பூனம் பாண்டேவை கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்காத நீதிமன்றம்

ஏற்காத நீதிமன்றம்

இதே கோரிக்கையுடன் நடிகை பூனம் பாண்டே தொடர்ந்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பூனம் பாண்டே மேல் முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபாச பட விவகாரம்

ஆபாச பட விவகாரம்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய வெப்சைட்டில் நடிகை பூனம் பாண்டேவின் ஆபாச படங்களும் இடம்பெற்று இருந்தன. அதன் காரணமாக தன்னையும் போலீசார் கைது செய்ய நேரிடும் என்கிற அச்சத்தால் இப்படியொரு மனுவை நடிகை பூனம் பாண்டே நீதிமன்றத்தில் அளித்திருந்தார்.

குற்றவாளி அல்ல

குற்றவாளி அல்ல

கடந்த 2015ம் ஆண்டே இணையதளங்களில் தனது ஆபாச படங்களை நீக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நடிகை பூனம் பாண்டே எந்த வகையிலும் தற்போது ஒருசில இணையதளங்களில் உலாவி வரும் ஆபாச படங்களுக்கு பொறுப்பானவர் அல்ல என அவரது தரப்பு நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தன. மேலும், அவர் குற்றவாளி அல்ல என்றும் உண்மையிலேயே இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும் வாதம் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடிகை பூனம் பாண்டேவை இது தொடர்பாக கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X