வசிக்கும் அப்பார்ட்மென்டில் இருந்து வனிதா மீது புகார்.. வழக்குப்பதிவு செய்தது போலீஸ்!
சென்னை: அனுமதி பெறாமல் வீட்டில் நிகழ்ச்சி நடத்தியதாக நடிகை வனிதா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
லாக்டவுன் காரணமாக வனிதாவின் வீட்டிலேயே எளிமையாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

போலீஸில் புகார்
இதில் வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

வனிதா புகார்
இதனால் வனிதாவின் திருமணம் பேசு பொருளானது. எலிசபெத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சினிமா பிரபலங்கள் மீது நடிகை வனிதா போலீஸில் புகார் அளித்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன், யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
கஞ்சா வியாபாரி என கூறியதால் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி வனிதா மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்றப் போது லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் அவரது கணவரையும் தரக்குறைவாக பேசினார்.

லீகல் நோட்டீஸ்
இதனால் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் அவரது கணவரும் வனிதாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வனிதா மீது போலீஸில் அவர் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில் இருந்தே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வனிதா வசித்து வருகிறார்.

வனிதா மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்தார். நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











