twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டாவது கொரோனா அலை.... மும்பையில் துவங்கியுள்ள சூட்டிங்... நடிகர்கள் ஹாப்பி!

    |

    மும்பை : கொரோனாவின் இரண்டாவது அலையால் தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

    இதனால் மும்பையில் பாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மும்பையில் சூட்டிங்குகள் மீண்டும் துவங்கியுள்ளன.

    மோசமான விளைவுகள்

    மோசமான விளைவுகள்

    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளும் அதையொட்டி உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்பட்டன. முதல் அலையைவிட இரண்டாவது அலை மிகவும் அதிகமான கோரத்தாண்டவத்தை நடத்தியது.

    தளர்வுகள் அறிவிப்பு

    தளர்வுகள் அறிவிப்பு

    இதையடுத்து ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு மட்டுப் பட்டுள்ளது. உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. லாக்டவுனில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.

    மும்பையில் மீண்டும் படப்பிடிப்பு

    மும்பையில் மீண்டும் படப்பிடிப்பு

    இந்நிலையில் மும்பையில் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இதையடுத்து தங்களது வீடுகளில் முடங்கியிருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளனர். இதுகுறித்து பலர் மகிழ்ச்சியாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    பாலிவுட் படம் குட்பை

    பாலிவுட் படம் குட்பை

    இதனிடையே டைரக்டர் மகேஷ் பஹி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தி படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்துவரும் நடிகை ராஷ்மிகாவும் சூட்டிங்கில் பங்கேற்று நடிக்கவுள்ளார். குட்பை என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படம் பாலிவுட்டில் தனக்கு சிறப்பான பாதையை அமைத்து தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Rashmika has resumed the shoot of her Hindi movie Goodbye with Amitabh Bachchan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X