பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்ததுமே அவ்ளோ வாய்ப்பாமே.. பிரபல ஹீரோயின் டபுள் ஹேப்பி!

By

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரபல ஹீரோயினுக்கு சினிமா மற்றும் டிவி வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில், விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜார்.

இந்தி, குஜராத்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது சல்மான் கான் தயாரிப்பில் காகஜ் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

ஒரே நடிகை

ஒரே நடிகை

இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். அதில் கலந்து கொண்ட ஒரே சினிமா நடிகை இவர்தான். இவரும் அந்த வீட்டில் கலந்து கொண்ட, போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அகில், இது வெறும் நட்புதான் என்றார்.

கடைசி போட்டியாளர்

கடைசி போட்டியாளர்

இந்நிலையில் மோனல் கஜ்ஜார், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார் என பல வாரங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டிஆர்பிக்காக, சேனலே அவரை காப்பாற்றி வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே கடைசி போட்டியாளரான அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

சரியாக தெரியாது

சரியாக தெரியாது

குஜராத்தை சேர்ந்த மோனலுக்கு தெலுங்கு சரியாக தெரியாது என்றாலும் அந்த வீட்டில், 98 நாட்கள் வெற்றிகரமாக இருந்தார். இதற்காகவே அவரை பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டில் 14 வாரங்கள் இருந்த அவருக்கு ரூ.49 லட்சம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கன்னாபின்னா ஃபேன்ஸ்

கன்னாபின்னா ஃபேன்ஸ்

தெலுங்கு பிக் பாஸில் இருந்து வெளியேறி விட்டாலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிகமான புகழும் ரசிகர்களும் கிடைத்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது சோசியல் மீடியா. அதில் அவருக்கு கன்னாபின்னா ஃபேன்ஸ். இதையடுத்து, அவருக்கு தெலுங்கில் சினிமா மற்றும் டிவி வாய்ப்புகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

அறிவிப்புகள் வரும்

அறிவிப்புகள் வரும்

இதற்காக அவர், பிக் பாஸ் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளாராம். பிக் பாஸில் இருந்து வெளியேறியுள்ள அவர், இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில நாட்கள் கழித்து அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள், அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று மோனல் தரப்பில் கூறப்படுகிறது. அவர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X