ஆர்த்தி ரவிக்கு படுக்கை துணை.. இதுவே போதும்னு முடிவு செஞ்சிட்டாரா?.. ரொம்ப சோகமா இருக்காரோ

சென்னை: ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட ரவி மோகன் சில காரணங்களால் அவரை விட்டு பிரிந்திருக்கிறார். சட்டப்பூர்வமாகவும் விரைவில் அவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. இந்நிலையில் சிங்கிளாக மாறியிருக்கும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து ட்ரெண்டாகியிருக்கிறது.

எடிட்டர் மோகனின் மகன் ஜெயம் ரவி இப்போது ரவி மோகனாக மாறியிருக்கிறார். பெரிய சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருந்த அவர் கடந்த் ஆம் ஆண்டு சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். குடும்பம், குழந்தைகள் என நிம்மதியாக இருந்த ரவி தனது மாமியாரின் தயாரிப்பிலும் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

பிரச்னையின் ஆரம்பம்: அப்படி அவர் நடித்ததுதான் பின்நாட்களில் பெரிய பிரச்னைக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதாவது வரிசையாக மருமகனை வைத்து படம் எடுத்த சுஜாதா சம்பள விஷயத்தில் சொதப்புவது, ரவி கேட்கும் கதைகளில் தலையிடுவது என இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆர்த்திக்கும் ரவிக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன மனஸ்தாபமும் ஏற்பட்ட தொடங்கிவிட்டது.

Post-Divorce Aarthi Reflects on Life True Peace Comes From Building It Yourself
Photo Credit:

முற்றிய பிரச்னை: சின்ன சின்ன மனஸ்தாபங்கள்தானே தீர்ந்துவிடும் என்றுதான் குடும்பத்தினரும் நினைத்தார்கள். ஆனால் அது நாளடைவில் பெரிதாகிக்கொண்டே சென்றது. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே பிரச்னையும் முற்றியது. ஒருகட்டத்தி இனியும் சேர்ந்திருப்பது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த ரவி; ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ரவி அவ்வாறு அறிவித்தாலும்; இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெட்டார் ஆர்த்தி.

கெனிஷாவுடன் பழக்கம்: இருப்பினும் அவர் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் ரவி பிடிகொடுக்கவே இல்லை. ஒருகட்டத்தில் நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இதற்கிடையே பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு ஏற்பட்ட பழக்கம் நட்பை தாண்டியும் சென்றது. அவர் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோதுகூட; அந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தார் கெனிஷா. இந்த உறவு எப்போது வேண்டுமானாலும் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கிளான ஆர்த்தி: கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக இருந்தாலும், இந்த பிரிவுக்கு பிறகு ஆர்த்தி சிங்கிளாகவே இருந்துவருகிறார். பெரும்பாலும் தனது மகன்களுடன் நேரம் செலவிடுவதை அதிகரித்திருக்கும் அவர்; கெனிஷா - ரவி பற்றி பெரும்பாலும் பேசுவதில்லை. அதேசமயம் ஆர்த்தியின் ஆதரவாளர்கள் அனைவருமே கெனிஷாவை லெஃப்ட் ரைட் வாங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஒரு தம்பதியை பிரித்து அவர் பாவம் செய்துவிட்டார் என்றும் கொதித்து பேசுகிறார்கள்.

ஆர்த்தியின் படுக்கை துணை: ரவியை பிரிந்திருக்கும் ஆர்த்தி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அந்தவகையில் அவர் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்த்தி நாய்க்குட்டியுடன் படுத்திருக்கிறாரா இல்லை டெடி பியரோடு படுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள். அதுமட்டுமின்றி ரவியை பிரிந்த பிறகு தனது படுக்கை துணை இதுவே போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் போல என்று கமெண்ட்ஸும் செய்திருக்கிறார்கள்.

அந்தப் புகைப்படத்தோடு அவர் கேப்ஷனாக, "அவர்கள் வளர்ந்து, தங்கள் சொந்த சிறிய உலகங்களை உருவாக்கிக்கொள்வதை பார்க்கும்போது, அது நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த நினைவூட்டல். ஏற்கனவே யாரோ கட்டியதைப் பயன்படுத்துவது எளிது. ஆனால் உண்மையான அமைதி, பிறர் உழைப்பைத் தட்டிச் செல்வதிலிருந்தோ, திருடப்பட்டவற்றிலிருந்தோ வராது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X