போஸ்ட் மேனிடம் திட்டு வாங்கிய வெற்றிமாறன் மகள்.. திட்டு வாங்கியது சரிதான் எனச் சொல்லும் அம்மா!

சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநராக உள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை பாகம் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இவர் தற்போது தனது வாடி வாசல் படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் இவரது மனைவி, ஆர்த்தி வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரது மகள் போஸ்ட் மேனிடம் திட்டு வாங்கியது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான முகமாக உள்ளார். மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர்களில் வெற்றி மாறனும் மிக முக்கியமானவர். இவரது படங்களும் இவரது திரைமொழியும் இவருக்கென தனி அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலும் பெற்றுத் தந்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் மக்களின் வாழ்வியலை நெருக்கமாக பேசிய வெற்றிமாறன், தனது விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 மற்றும் விடுதலை பாகம் 2 படங்கள் மூலம் வாழ்வியலோடு சேர்ந்து அரசியலையும் பேசி, தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரது படங்கள் பேசிய காத்திரமான அரசியல் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் எதிரொலித்தது.

Post Man Slams Director Vetri Maaran Daughter Says Aarthi Vetri Maaran

ஆர்த்தி வெற்றிமாறன்: வெற்றிமாறன் காதல் திருமணம் செய்து கொண்டவர். இவர் ஆர்த்தி என்ற மென்பொறியாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அண்மையில் ஆர்த்தி வெற்றி மாறனின் 50வது பிறந்த நாள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஆர்த்தி வெற்றிமாறன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரவேற்பைப் பெற்றது.

வெற்றிமாறன் மகள்: இந்நிலையில் ஆர்த்தி வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளை போஸ்ட் மேன் திட்டியது தொடர்பாக பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதை நினைத்து தான் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, " எனது மகள் மிகவும் அமைதியான குணம் உடையவர். தன் மீது மற்றவர்கள் கோபப்படும் அளவிற்கு அவர் நடந்து கொள்ள மாட்டார். எனது மகள் வீட்டு படிக்கட்டுகளில் நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். வீட்டிற்கு வந்திருந்த தபாலைக் கொடுப்பதற்காக வந்திருந்த போஸ்ட் மேன், எனது மகளை அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைத்தது எனது மகளுக்கு கேட்கவில்லை. அதன் பின்னர் அந்த தபால்காரர் எனது மகளைத் திட்டியுள்ளார்.

Post Man Slams Director Vetri Maaran Daughter Says Aarthi Vetri Maaran

பாராட்டு: இது குறித்து எனது மகள் என்னிடம் கூறினார். நான் மனதிற்குள் நல்லது நடந்துள்ளது என நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் நாளை எனது மகள் வெளியே போகும்போதும் இதுதானே நடக்கும். எங்களுடன் நடந்து வரும் வரை ஓ.கே. வெளியே போனால் இதெல்லாம் நடக்கத்தானே செய்யும். மற்ற குழந்தைகளும் இது போன்ற விஷயங்களை எதிர் கொள்கிறார்கள் இல்லையா! அதற்கான எனது மகளுக்கும் அப்படி நடக்க வேண்டும் எனக் கூறவில்லை. எனது மகள் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார். ஆர்த்தி வெற்றிமாறனின் இந்த பேச்சு, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும்,ஆர்த்தி தனது மகளை சிறப்பாக ஆளாக்குகிறார் என பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X