நெட்பிளிக்சுக்கு விற்கப்பட்ட பீஸ்ட் படம்... ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது பீஸ்ட் படம்.
தளபதியின் பிறந்ததினத்தையொட்டி நேற்று முன்தினம் படத்தின் தலைப்பு மற்றும் 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்சுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்
தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்துவரும் படம் பீஸ்ட். தளபதி 65 என்று குறிப்பிடப்பட்ட இந்த படம் நேற்றைய தினம் விஜய்யின் பிறந்ததினத்தையொட்டி தலைப்பு மற்றும் 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

மீண்டும் சூட்டிங்
இந்நிலையில் வரும் மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள இந்த சூட்டிற்கான செட்கள் தற்போது மும்முரமாக போடப்பட்டு வருகின்றன.

இருவரையும் திரையில் பார்க்க விருப்பம்
விஜய் பிறந்தநாளையொட்டி இருவரது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இந்த முகங்களை திரையில் பார்க்க விரும்புவதாக பூஜா ஹெக்டே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள தலைப்பு மற்றும் போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதலில் தியேட்டர்களில் ரிலீஸ்
இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்சிற்கு விற்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அதன்பின்பு நெட்பிளிக்சில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











