பொன்னியின் செல்வனுக்காக த்ரிஷா பேசிய வீடியோ - என்ன சோழர் காலத்து குந்தவை ஆங்கிலத்தில் பேசுறாங்க

சென்னை: அக நக பாடலை ரசிகர்கள் பாடி #Aganagacoverscontest என்ற ஹேஷ் டேக்கில் பதிவிட்டு பரிசுகளை வெல்லலாம் என படக்குழு அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. 60 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் இன்றைய தலைமுறையினரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 1

பொன்னியின் செல்வன் 1

பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தாலும் அதை வாசிக்காதவர்களையும் வாசிக்கத்தூண்டியது பொன்னியின் செல்வன் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நாவல் வாசித்தவர்களுக்கு முதல் பாகத்தின் மீது இருந்த சிறு சிறு குறைகளையும் இரண்டாம் பாகம் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. படமானது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லரும் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

அக நக பாடல் போட்டி

அக நக பாடல் போட்டி

ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார். இதற்கான பணி சமீபத்தில் லண்டனில் இருக்கும் ஸ்டூடியோவில் நடந்தது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குந்தவைக்கும், வந்தியத்தேவனுக்கும் இடையே இருக்கும் காதலை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அக நக பாடலுக்கான போட்டியை பொன்னியின் செல்வன் படக்குழு அறிவித்துள்ளது.

போட்டியை ஆங்கிலத்தில் அறிவித்த குந்தவை

போட்டியை ஆங்கிலத்தில் அறிவித்த குந்தவை

அதன்படி அக நக பாடலை ரசிகர்கள் பாடி #Aganagacoverscontest என்ற ஹேஷ் டேக்கில் பதிவிடலாம் எனவும், நன்றாக பாடுபவர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷா வீடியோவில் பேசி வெளியிட்டார். அந்த வீடியோவில் த்ரிஷா முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், என்ன குந்தவை ஆங்கிலத்தில் பேசுகிறார் என கமெண்ட்டும் செய்துவருகின்றனர்.

தொடர் வீடியோக்களை வெளியிடும் படக்குழு

தொடர் வீடியோக்களை வெளியிடும் படக்குழு

முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது., அதேபோல் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோ கடந்த 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X