பொன்னியின் செல்வன் 2 ‘வைப்’..நந்தினி அக்கா அவிங்கள முடிச்சுறு..மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!
சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா,நாசர், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கலவையான விமர்சனம் : பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதையடுத்து நேற்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
சொதப்பிய மணிரத்னம் : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இல்லை என்று படம் பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் மணிரத்னம் தனது கற்பனையை புகுத்தி சொதப்பிவிட்டார் என்று இணையத்தில் பட்டிமன்றம் வைத்து பேசும் அளவுக்கு ஒரு விவாதமே நடந்து வருகிறது.
முதல் நாள் வசூல் : என்னத்தான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் வசூல் மொத்தமாகவே 67 கோடியை குவித்துள்ளது. இதை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தின் டாப் நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் நாள் வசூலை பொன்னியின் செல்வன் மிஞ்சி உள்ளது.

வித்தியாசமான நோட்டீஸ் : இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் மதுரை மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த வித்தியாசமான போஸ்டரை பார்த்து பலர் சிரித்துவிட்டு கடந்து செல்கின்றனர்.
நந்தினி அக்கா : அந்த போஸ்டரில், உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பாத்த சோழர்கள் இனிமேல் நம்மபக்கம் தலை வச்சு கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சுறு என்றும், பகை மறவாபாண்டியரின் வாரிசுகள் என்று அச்சிடப்பட்டு மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











