தாராள பிரபு.. கான்ட்ரோவெர்ஸியான கான்செப்ட்.. ஆனா.. போஸ்டர் பக்கிரி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: தாராள பிரபு படம் எப்படி உள்ளது என்பது குறித்த விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் போஸ்டர் பக்கிரி.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி இருக்கும் படம் தாராள பிரபு. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு அனிருத், சான் ரோல்டன் உள்ளிட்ட 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியானது.

ஸ்பெர்ம் டோனர்
தாராள பிரபு படம் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் போஸ்டர் பக்கிரியும் படம் குறித்த தனது விமர்சனத்தை வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார். அதன்படி ஃபுட் பால் பிளேயரான ஹரிஷ் கல்யாண் ஸ்பெர்ம் டோனராகவும் நடித்துள்ளார்.

படத்தின் ஹீரோ
படத்தின் ஹீரோவே நடிகர் விவேக் தான் கூறியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. ஃபெர்ட்டிலிட்டி சென்டர் நடத்தி வரும் நடிகர் விவேக், ஸ்பெர்ம் டோனராக ஹரிஷ் கல்யாணை தேர்வு செய்துவிட்டு அவரை சம்மதிக்க வைக்க படும்பாடு அவ்வளவு நேர்தியாக உள்ளதாம். குழந்தை பெற முடியாதவர்களின் சந்தோஷத்திற்காக அவர் சந்திக்கும் அவமானங்களும் படும் கஷ்டங்களும் படத்திற்கு அத்தனை வலு சேர்க்கிறதாம்.

விக்கி டோனர்
விவேக் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையுடன் அத்தனை அற்புதம் என்று பாராட்டியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. ஸ்பெர்ம் டோனராக இருந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் சந்திக்கும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறதாம் தாராள பிரபு. இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரிமேக்தான் இந்த தாராள பிரபு.

கான்ட்ரோவெர்ஸி கான்செப்ட்
இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதனை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா மாரிமுத்து. கான்ட்ரோவர்ஸியான கான்செப்ட்டை ஃபீல் குட் குடும்பப்படமாக அழகாக மைல்டான இசையுடன் கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். நடிகை தன்யா ஹோப்பும் அவ்வளவு அழகாக உள்ளார் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வர்ணித்திருக்கிறார்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
இப்படத்திற்கு படத்தின் ஒளிப்பதிவு குறித்தும் பேசியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. இந்திப் பட ஸ்டைலில் படம் முழுக்க கேமரா புகுந்து விளையாடியிருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்றும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மைல்டான லைட்டில் பிடித்ததை சாப்பிடுவதை போன்று இருக்கிறது என அசத்தல் ரிவ்வியூவை கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











