ஜிப்ஸி படம் எப்டி இருக்கு.. நம்ம போஸ்டர் பக்கிரி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: ஜிப்ஸி படம் குறித்த தனது ரிவ்யூவை வீடியோவாக வழங்கியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி.
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜிப்ஸி படம் நேற்று வெளியானது. படம் குறித்து பலரும் தங்களின் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் போஸ்டர் பக்கிரியும் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதன்படி அரசியலும் காதலும் சேர்ந்த கதையில் அங்கங்கு சென்சார் போர்டு கத்தரி போட்டு வெறும் காதல் கதையை மட்டும் திரையில் அனுமதித்திருக்கிறது என கூறியுள்ளார். இருப்பினும் அங்கங்கே அழுத்தமான அரசியல் வெளிப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
வாரணாசியில் ஏற்பட்ட மதக்கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நாடோடியாக வலம் வரும் ஜீவா, அந்த கதாப்பாத்திரமாகவே மாறி, அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என புகழ்ந்திருக்கிறார்.
இதேபோல் சந்தோஷ் சிவனின் இசை, செல்வகுமார் எஸ்கேவின் ஒளிப்பதிவு உள்ளிட்டவற்றையும் பாராட்டியிருக்கிறார். ஜிப்ஸி படம் குறித்த போஸ்டர் பக்கிரியின் முழு விமர்சனத்தையும் இந்த வீடியோவில் காணலாம்..


Click it and Unblock the Notifications











