»   »  இன்னொரு வழக்கில் போத்ரா மீண்டும் கைது

இன்னொரு வழக்கில் போத்ரா மீண்டும் கைது

Subscribe to Oneindia Tamil

சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் எம்.பி. அன்பரசுவின்மகனுமான அருள் அன்பரசுவை தொலைபேசியில் மிரட்டியதாக சினிமா பைனான்சியர்போத்ராவை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மார்வாடி யானகுல்சந்த் போத்ரா, நடிகை ரோஜா மீது செக்மோசடி வழக்குப் போட்டு அலைய வைத்தவர். மேலும் பல நடிகைகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் போத்ரா. ஏகப்பட்ட திகைப்படங்களுக்கு பைனான்ஸ்செய்துள்ளார்.

இந்த போத்ரா சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார்.அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு, தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டுஏமாற்றியதாக புகார் கூறினார் போத்ரா.

இந் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அருள் அன்பரசுவுக்குசெல்போனில் அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசிய அன்பரசுவின் உதவியாளர்பிரகாஷிடம், போனில் பேசிய நபர் அருள் அன்பரசுவிடம் பேச வேண்டும் என்றுகூறியுள்ளார்.

அதற்கு பிரகாஷ், தேர்தல் பிரசாரத்தில் அருள் அன்பரசு பிசியாக இருப்பதாககூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த மர்ம நபர், அவருடையே தலை எழுத்தே மாறப்போகிறது. போனை அவரிடம் கொடுடா என்று கூறியுள்ளார். இதையடுத்து போனைவாங்கி அருள் அன்பரசு பேசினார்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர், உடனடியாக ரூ. 1 கோடி பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து விடு. 2 நாள் டைம் கொடுக்கிறேன். ஜெயிக்கப் போகிறாயா?உயிரோடு இருந்தால்தானே ஜெயிக்க முடியும். சொன்னபடி பணத்தைக்காடுக்காவிட்டால் உன்னைப்பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுஅசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந் நிலையில் தன்னை மிரட்டியது யார் என்று தெரியாத அருள் அன்பரசு, ஒருதனியார் தொலைக்காட்சியில் போத்ரா தன்னைப் பற்றி பேட்டிக் கொடுப்பதைப்பார்த்துள்ளார். இதன் மூலம் போத்ராதான் தன்னை போனில் மிரட்டியது என்பதைஅவர் அறிந்து கொண்டார்.

இதையடுத்து சோளிங்கர் காவல் நிலையத்தில் அருள் அன்பரசு புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர் (அப்போதுஅதிமுக வசம் ஆட்சி இருந்தது). இந்த நிலையில் அருள் அன்பரசுக்குவேண்டப்பட்டவரான மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போத்ராவைபோலீஸார் கைது செய்து மத்திய சிறையில் தள்ளினர்.

தற்போது அருள் அன்பரசுவின் புகார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அருள் அன்பரசு கொடுத்துள்ள புகாரின் பேரில் தற்போது போத்ராவை போலீஸார்கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அருள் அன்பரசு கூறுகையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் இருந்துவிலகி சொந்தமாக கல்லூரி தொடங்குவதற்காக, தனது சொத்துக்களை போத்ராவிடம்அடமானம் வைத்து ரூ. 22 லட்சம் பணம் வாங்கினார் மணி.

எனது தந்தை தொடர்புடைய அறக்கட்டளையில் மணி இருந்தால் என்ற ஒரேகாரணத்திற்காக என்னையும் அதனுடன் தொடர்புப்படுத்தி போத்ரா பேசத்தொடங்கினார் போத்ரா.

எனக்குத் தொலைபேசியில் மிரட்டலும் விடுத்தார். அந்த அறக்கட்டளையில் நான்உறுப்பினர் கூட இல்லை. அப்படி இருக்கையில் என்னை ஏன் அவர் மிரட்டினார்என்று தெரியவில்லை.

சோளிங்கர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் ஜெயித்திருக்கவேண்டும். போத்ராவின் பேட்டியால் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நான்ஜெயிக்க முடிந்தது என்றார் அருள் அன்பரசு.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil