»   »  கரை வேட்டிகள் கரை ஏற்றிய பொதுவாக எம்மனசு தங்கம்!

கரை வேட்டிகள் கரை ஏற்றிய பொதுவாக எம்மனசு தங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் நடிப்பில் தளபதி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம் பொதுவாக எம்மனசு தங்கம்.

ஆகஸ்ட் 11 அன்று தனுஷ் நடிப்பில் வெளியான பெரிய படமான விஐபி 2 உடன் நேரடியாக களத்தில் குதித்த பஇந்தப் படம் வசூல் ரீதியாக முதல் காட்சியிலேயே தோல்வியை தமிழகம் முழுவதும் சந்தித்தது. படத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் உதயநிதிக்கு.

Pothuvaga Emmanasu Thangam BO report

உதயநிதி நடிக்கும் படங்களை திமுகவினர் தொடக்க காலத்தில் கூட்டம் கூட்டமாகப் பார்த்து வந்தனர். பின்னர் அப்பா ஸ்டாலின் வாரிசாக அரசியல் செய்ய உதயநிதி வரமாட்டார் என நினைத்து உடன்பிறப்புகள் இவரது படங்களை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதனால் முதல் நாளில் பொதுவாக எம்மனசு தங்கம் தியேட்டரில் தடுமாறியது. விஐபி 2 கல்லா கட்டியது.

படம் வெளியான அன்று முரசொலி பத்திரிகையின் பவள விழா விளம்பரம் காலை நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.முரசொலி அறக்கட்டளையின் முதன்மை பொறுப்பு உதயநிதி ஸ்டாலின், விழாவில் நன்றி உரை என குறிப்பிடப்பட்டிருந்தது. மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின்தான் அடுத்த தலைமுறை வாரிசு என்பதை அவரது செயல்பாடு, முக்கியத்துவம் உடன்பிறப்புகளுக்கு உணர்த்தியது.

ஆகஸ்ட் 12 முதல் தியேட்டர்களில் கரை வேட்டிகளுக்கு கணக்கின்றி டிக்கட் கிழிக்கப்பட்டது. கல்லா நிரம்பவில்லை என்றாலும் தொடர் விடுமுறை என்பதால் ஓரளவு வசூல் ஆனதால் அசல் தேறிவிடும் என்பதே தற்போதைய நிலைமை.

சினிமா ரசிகனால் நிராகரிக்கப்பட்ட பொதுவாக எம்மனசு தங்கம் அரசியல் கட்சி தொண்டர்களால் ஆராதிக்கப்பட்டு வெற்றிப்படமாகியிருக்கிறது. கடந்த ஆறு நாட்களில் சுமார் ரூ 5 கோடி வரை தியேட்டர்களில் இப்படம் வசூல் செய்திருக்கிறது.

English summary
Box office report of Udhayanithi Stalin's Pothuvaga Emmanasu Thangam movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil