ஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்?

By Siva

சென்னை: பரத் நடித்துள்ள பேய் படமான பொட்டு ஒரு வழியாக வரும் 8ம் தேதி ரிலீஸாகிறது.

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்துள்ள பேய் படம் பொட்டு. இந்த படத்தில் நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி 2017ம் ஆண்டின் துவக்கத்திலேயே போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்தது.

Pottu is finally getting released

பட ரிலீஸ் தள்ளிப் போய் தள்ளிப் போய் ஒரு வழியாக நாளை மறுநாள் ரிலீஸாகிறது. ஸ்ருஷ்டி டாங்கே மருத்துவ மாணவியாகவும், பரத்தின் காதலியாகவும் நடித்துள்ளார். நமீதா வில்லியாக நடித்துள்ளார். பரத்தின் கெரியர் சொல்லிக் கொள்ளும்படி இல்லாத நிலையில் பொட்டு படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

பேய் படம் வந்தால் அதை ஹிட்டாக்காமல் விடுவது இல்லை என்ற முடிவோடு உள்ளனர் கோலிவுட் ரசிகர்கள். பரத்தின் பொட்டு படத்தை அவர்கள் ஹிட்டாக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Pottu is finally getting released

மேலும் வரும் 8ம் தேதி பொட்டு படத்துடன் சேர்ந்து பூமராங், சத்ரு, கபிலவஸ்து, ஸ்பாட் ஆகிய 4 படங்கள் ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X