கொஞ்சம் இருங்க பவுடர் அடிச்சிருக்குறேன்..பவுடர் பட விழாவில் கூல் சுரேஷ் அலப்பறை!

சென்னை: பவுடர் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பவுடர் அடித்து வந்து அலப்பறையாக பேசினார் நடிகர் கூல் சுரேஷ்.

மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் திரைப்படம் பவுடர்.இதில், அனித்ரா நாயர், சாந்தினி தேவா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர்

பவுடர்

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து மிகவும் திரில்லராக உருவாகியுள்ள பவுபடர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்,பாக்யாராஜ்,இயக்குநர் வசந்த்,ராதா ரவி, பார்த்திபன் ,கூல் சுரேஷ் மற்றும் பவுடர் படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகையினர் கலந்து கொண்டு பேசினர்.

வெற்றி பெறும்

வெற்றி பெறும்

இவ்விழாவில் பேசிய கே பாக்யராஜ் இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரம் எடுத்துள்ள நிகில் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

கூல் சுரேஷ் அலப்பறை

கூல் சுரேஷ் அலப்பறை

இவ்விழாவில் பேசிய கூல் சுரேஷ், பேசி கைத்தட்டல் வாங்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை இதனால், நான் பேசுவதற்கு முன்பே கை தட்டிவிடுங்கள் என்றார். போதுவா பூவோட சேர்ந்த நாறு மணக்கும்னு சொல்லுவாங்க, நாறு நான் இங்கே இருக்கிறேன் பூ வேண்டாமா என்று பவுடர் படத்தின் நாயகியை அருகில் அழைத்து வா..வந்து பக்கத்துல நில்லு என்று அலப்பறையை கொடுத்தார்.

நான் ஜோக்கர் தான்

நான் ஜோக்கர் தான்

அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் இருங்க என்று கூறி டப்பாவில் இருந்து பவுடரை முகத்தில் பூசிக்கொண்டார்.என்னடா முகத்தில் இப்படி பவுடர் அடித்துக்கொண்டு இருக்கிறான், சரியான ஜோக்கர் என்று நினைப்பீர்கள் உண்மையில் நானும் ஜோக்கர் தான், இந்த படத்தின் ஹீரோ நிகிலும் ஜோக்கர் தான். ஏன் என்றால் ஜோக்கர் யார் கைக்கு வருதோ அவர் ஜெயிப்பாரு என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X