ப்பா.. என்ன கிரவுட்.. கன்டென்ட் பவரா இருக்கணும்.. லைகர் படத்தை மறைமுகமாக சீண்டுகிறதா சீதா ராமம்?
சென்னை: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் 4வது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீதா ராமம் படத்தை புரமோட் செய்பவர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து ட்வீட் போட்டுள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தைத் தான் கலாய்க்கிறார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சுக்கு கூடிய விரைவில் அவர் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விடுவார் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

80 கோடி வசூல்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் இதுவரை 24 நாட்களில் ஒட்டுமொத்தமாக 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெறும் 25 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் மற்றும் கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

4வது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்
சீதா ராமம் திரைப்படம் 4 வாரங்களை கடந்து பல புதிய படங்கள் வெளியான நிலையிலும், இன்னமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடி வருவதாக சீதா ராமம் படத்தை புரமோட் செய்பவர் ட்விட்டரில் வீடியோவுடன் ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

லைக் போட்ட சீதா
சீதா மகா லக்ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாகூர் அந்த ட்வீட்டை ஷேர் செய்து லைக் போட்டுள்ளார். சீதா ராமம் படத்தைத் தொடர்ந்து மிருணாள் தாகூருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக மாறி விட்டனர். வம்சி சேகர் ஷேர் செய்த அந்த ட்வீட்டை மிருணாள் தாகூர் லைக் செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

பவர் ஆஃப் கன்டென்ட்
இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த காதல் காவியமான சீதா ராமம் இப்படியொரு ஹிட் அடிக்க காரணமே அதன் கன்டென்ட் தான் என வம்சி ஷேகர் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள், விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் அப்போ கன்டென்ட்டே இல்லைன்னு சொல்ல வரீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

லைகரை சீண்டுகிறதா
சீதா ராமம் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் அந்த படக்குழு படு தோல்வியை சந்தித்த விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை மறைமுகமாக சீண்டுகிறதா என ட்ரோல்கள் பறந்து வருகின்றன. பாலிவுட் பாய்காட் எல்லாம் சும்மா மாயை தான் படம் நல்லா இருந்தால் கண்டிப்பாக ஓடும் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











