பவர் பாண்டி பெயர் மாற்றம்: ராசி காரணமோ?
சென்னை: தனுஷ் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ஹீரோ ராஜ்கிரண். இதுவரை இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகியுள்ளன.

முதல் ட்ரெய்லர் முழுக்க ஸ்டைலான ராஜ்கிரண் வந்தார். இரண்டாவது ட்ரெய்லர் முழுக்க இளம் வயது ராஜ்கிரணாக நடித்துள்ள தனுஷ் வந்துள்ளார்.
ட்ரெய்லர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வரி விலக்கிற்காக பவர் பாண்டி என்ற தலைப்பை ப. பாண்டி என்று மாற்றியுள்ளனர்.
இயக்குனர் தனுஷின் படைப்பை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications