'சூப்பர் ஸ்டாரின்' எந்திரன் பட்ஜெட்டை தாண்டுகிறதா 'பவர் ஸ்டாரின்' ஐ?
சென்னை: சூப்பர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் பட்ஜெட்டை விக்ரம் நடிக்கும் ஐ படம் தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் இருக்கும் அதிலும் சூப்பர் ஸ்டார் வேறு சேர்ந்ததால் பிரமாண்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. மேலும் பல காலமாக ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க விரும்பிய ரஜினியின் ஆசை இந்த படத்தில் தான் நிறைவேறியது.
இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே இதுவரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது எந்திரன் தான். ஆனால் தற்போது அந்த பெருமை விக்ரமின் ஐ படத்திற்கு சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எந்திரன்
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராயை வைத்து ஷங்கர் எடுத்த எந்திரன் படம் தான் இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்ச பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

ரூ.145 கோடியில் ஐ?
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் உள்ளிட்டோர் நடிக்கும் ஐ படம் ரூ.80 முதல் 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ.145 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

எந்திரன் பட்ஜெட்டை தாண்டும் ஐ?
ஒரு வேளை ஐ படத்தின் பட்ஜெட் ரூ. 145 கோடியாக இருந்தால் இந்தியாவில் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை எந்திரனிடம் இருந்து ஐ தட்டிப் பறிக்கும். ஐ படத்தின் போஸ்டர்களே ஹாலிவுட் ரேஞ்சில் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











