»   »  திகாரை அடுத்து பெங்களூரு சிறையில் பவர் ஸ்டார்: ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?

திகாரை அடுத்து பெங்களூரு சிறையில் பவர் ஸ்டார்: ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது மோசடி வழக்கில் கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதுமாக உள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Power star is now powerful star

அப்போது அந்த சிறையில் தான் பவர் ஸ்டாரும் இருந்தார். இந்நிலையில் பவர் ஸ்டார் மேலும் ஒரு மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் உள்ளனர். தினகரனுக்கு கம்பெனி கொடுத்த பவர் தற்போது சசி இருக்கும் சிறையில் உள்ளார்.

ஹே ஹே நாங்க எல்லாம் சசிகலா இருந்த சிறையில் இருந்தோமாக்கும், அவர் எல்லாம் என் ஃப்ரெண்ட் என்று பவர் சொன்னாலும் சொல்வார். திகாரில் இருந்தபோது அங்கிருந்த தமிழக போலீசார் எல்லாம் தனது நண்பர்களாகிவிட்டதாக கூறியவர் தானே பவர்.

English summary
Power star Srinivasan was in Tihar jail when TTV Dinakaran was lodged there. Now he is in Bengaluru jail where Sasikala is lodged.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil