பவர் ஸ்டாரும் மூன்று திருடர்களும்…. 4 பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க!

By Mayura Akilan

ஒரு எழுத்து இரண்டெழுத்தில் திரைப்படத்தில் பெயர்வைப்பது போய் இப்போது நீளமாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க.

லத்திகா மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த பவர்ஸ்டார் இப்போது நகைச்சுவை கம் குணசித்திர நடிகராக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

புதுமுக நடிகர்கள், புதிய தயாரிப்பாளர்கள் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவாராக நடிக்கிறார். லட்டு படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த பவர் ஸ்டார் இந்த படத்தில் ரொம்ப நல்ல ஹீரோவாக பெர்ப்பாம் செய்யப்போகிறாராம்.

இரண்டு கதாநாயகிகள்

இரண்டு கதாநாயகிகள்

ஐ சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன், பாலாஜி, யாசின் மற்றும் திருப்பதி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சினேஹல், திஷா ஆகியோர் கதாநாயகர்களாக அறிமுகமாகின்றனர்.

அவுரங்காபாத் வில்லன்

அவுரங்காபாத் வில்லன்

பவர்ஸ்டாருடன் மோதப்போகும் வில்லன் அவுரங்காபாத்தை சேர்ந்த அப்சர்கான். இவரும் அறிமுகம்தான். இந்த படத்தில் நடிகர் சுரேஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

பொய், பித்தலாட்டம் தெரியாது

பொய், பித்தலாட்டம் தெரியாது

திருட்டை மட்டுமே தொழிலாகக் கொண்ட மூன்று பேர் பொய், பித்தலாட்டம், திருட்டு எதுவும் தெரியாத பவர்ஸ்டாருடன் சேர்கின்றனர். அவர்கள் திருந்தினார்களா? அல்லது அவர்களுடன் சேர்ந்த பவரும் திருடன் ஆனாரா என்பதுதான் கதை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில்

யுவன் சங்கர் ராஜாவின் இசையில்

பவர்ஸ்டார் தவிர தயாரிப்பாளர் தொடங்கி எல்லாமே புது முகமாக இருந்தாலும் இந்த படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா. படத்தில் ஐந்து பாடல்களை நச்சென்று இசை அமைத்திருக்கிறாராம் யுவன். புதிய இயக்குநர் படத்தில் எப்படி யுவன் சங்கர் ராஜா இசை என்று கேட்பவர்களுக்கு விடை அடுத்த பாராவில் இருக்கிறது.

இயக்குநரும் புதுமுகம்தான்

இயக்குநரும் புதுமுகம்தான்

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜோவி. இவர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இணை இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இளையமகன்தான் இயக்குநர் ஜோவி.

படத்தயாரிப்பாளரே கதாநாயகன்

படத்தயாரிப்பாளரே கதாநாயகன்

கர்நாடக மாநிலம் பெல்ஹாம் நகரைச் சேர்ந்த யாசின் ஹவேலிதான் படத்தின் தயாரிப்பாளர். இவர் நான்கு பேரில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகன் பாலாஜி இவருடன் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

பவருக்கு கொண்டாட்டம்தான்

பவருக்கு கொண்டாட்டம்தான்

புது தயாரிப்பாளர், புது இயக்குநர், புது கதாநாயகி என நாலு பேரும் நல்லவங்க படத்தில் பவர் ஸ்டாருக்கு ஒரே கலக்கல் கொண்டாட்டம்தான்.

அந்தமான், ஃப்ரான்ஸ் படப்பிடிப்பு

அந்தமான், ஃப்ரான்ஸ் படப்பிடிப்பு

நாலுபேரும் ரொம்ப நல்லவங்க படத்தின் படப்பிடிப்பு மார்ச் 14ல் தொடங்குகிறது. ஊட்டி, தூத்துக்குடி கோவா, அந்தமான் என இந்தியாவின் கலர்ஃபுல் இடங்களிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X