அந்தக் "கருமத்தை" என்னாலேயே சகிச்சுக்க முடியலையே... "பவர்" ஸ்டார் பலே புலம்பல்!

By Sudha

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம்தான். இல்லாவிட்டால் தான் நடித்த, தயாரித்த படங்கள் குறித்து அவரே கடுமையாக விமர்சிப்பாரா..

ஒரு நேரத்தில் ஓஹோவென்று கோலிவுட்டைக் கலக்கி வந்தவர் பவர்ஸ்டார். எல்லாமே பில்டப்புதான் என்றாலும் கூட தன்னை வைத்து நடந்த கேலிக் கூத்துக்களையும், விமர்சனங்களையுமே வைத்து பிரபலமானவர் பவர் ஸ்டார்.

தன்னைக் கேலி செய்வோருக்கு விழா எடுத்துக் கொண்டாடும் அளவுக்கு அப்போது படு ஜாலி மூடில் இருந்தவர் பவர் ஸ்டார். அவரே வலியக்கப் போய் பட விழாக்களை கலகலப்பாக்கினார். கல்லூரி விழாக்களுக்குப் போனார். அவரே காசு பணத்தை செலவு செய்து விழாக்களை நடத்தினார்.

பண மோசடியில் சிக்கி

பண மோசடியில் சிக்கி

ஆனால் ஒரு நல்ல நாளில் அவர் பண மோசடியில் சிக்கி சிறைக்குப் போனபோதுதான் பவர் ஸ்டாரின் உச்சம் சரியத் தொடங்கியது.

சிறைக்குள் சிக்கிய கலர் கண்ணாடி

சிறைக்குள் சிக்கிய கலர் கண்ணாடி

பளிச்சென இருக்கும் பவர் ஸ்டார் சிறைக்குள் சில வாரங்களைக் கழித்து விட்டு வெளியே வந்தபோது அவரே அவருக்காக உருவாக்கி வைத்திருந்த சாம்ராஜ்யத்தைக் காணோம்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

இப்போதுதான் பவர் ஸ்டாரின் முடியே இல்லாத தலையில் ஞானம் பிறந்துள்ளது. தனது படங்களை தன்னாலேயே பார்க்க முடியவில்லை, சகிக்கவில்லை. இதையெல்லாம் எப்படித்தான் மக்கள் பார்ப்பார்களோ என்று உண்மையாக பேசுகிறாராம்

ஆனந்தத் தொல்லை மட்டும்

ஆனந்தத் தொல்லை மட்டும்

தான் நடித்து வந்த அத்தனை படங்களையும் தூக்கிப் போட்டு விட்டாராம். அதேசமயம், ஆனந்தத் தொல்லை படத்தை மட்டும் எப்படியாவது ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

அந்தத் தொல்லையோடு எல்லாத் தொல்லையும் ஒழியட்டும்.. !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X