இதுவரை மனிதர்களுடன் மட்டுமே நடித்து வந்த உங்கள் பாசத்துக்குரிய பவர்ஸ்டார்...!
சென்னை: பவர் ஸ்டார் என்று தமிழ்த் திரையுலக ரசிக மகாஜனங்களால் போற்றி புகழப்படும் டாக்டர் சீனிவாசன் முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் அடுத்து நடிக்கவுள்ள படம் நான் சரக்கு நீ ஊறுகாய்.
இந்தப் படத்தின் மூலம் நாய், குரங்கு, மாடு, ஆடு போன்றவற்றை வைத்து அதிக படங்களை இயக்கி உலக சாதனை படைத்தவரான ராம. நாராயணனுடன் முதல் முறையாக இணைகிறார் பவர் ஸ்டார்.
உங்க மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.. எஸ், இந்தப் படத்திலும் ஒரு குரங்கு முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம்.

குரங்குடன் பவர் இணைவது இதுவே பர்ஸ்ட் டைம்
இதுவரை மனிதர்களுடன்மட்டுமே நடித்து வந்த உங்கள் பாசத்துக்குரிய பவர் ஸ்டார் இந்தப் படத்தில் முதல் முறையாக ஒரு குரங்குடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கின்னஸ் ராம நாராயணன்
அதேபோல இதுவரை அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரிய ராம. நாராயணனுடன் 2வது முறயாக இணைகிறார் பவர் ஸ்டார். ஏற்கனவே ராம நாராயணன் தயாரித்திருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டார் முக்கியப் பங்காற்றியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஏதாவது ஒருவிலங்கு... இந்தப் படத்தில் குரங்கு
ராம.நாராயணன் இயக்கும் படத்தி்ல ஏதாவது ஒரு விலங்கை நுழைத்து விடுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்தப் படத்தில் குரங்கு ஒன்றை நடிக்க வைக்கிறாராம்.

பட், ஹீரோ.. பவர்தான்!
இந்தப் படத்தில் குரங்கு நடிப்பதால் அதை யாரும் ஹீரோ என்று கருதி விட வேண்டாம். அந்த வேலையை பவர் ஸ்டார் தான் பார்க்கப் போகிறார். அட ஆமாங்க, அவர்தான் இந்தப் படத்தின் ஹீரோ...

நான் சரக்கு நீ ஊறுகாய்
உன் போதைக்கு நான் ஊறுகாவா என்பது குடிமொழி.. அதாவது குடிகாரர்களின் பழமொழி. இந்தப் படத்திற்கு வைத்துள்ள பெயரோ நான் சரக்கு நீ ஊறுகாய்...
பட்டை போடாமலேயே பட்டையைக் கிளப்புங்க பவர்...!


Click it and Unblock the Notifications











