பவன் கல்யாண்.. கன்னட ஸ்டார் சுதீப்... இரு ஜாம்பவான்களுக்கும் இன்று பிறந்த நாள்!

ஹைதராபாத் : தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பவர்ஸ்டார் பவன்கல்யாண் மற்றும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகர் சுதீப் இருவரும் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Mahat reduced his salary | Simbhu Friends on Board, Mahat, Harrish Kalyan

தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான "வக்கீல் சாப்" திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் பவன் கல்யாணின் பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்டது.

இவ்வாறு செப்டம்பர் 2 ஆம் தேதியான இன்று கன்னடா மற்றும் தெலுங்கு திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் சுதீப் என இரு ஜாம்பவான்கள் இன்று ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வருவதால் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை திணறடித்து வருகின்றனர்.

தேசிய விருது

தேசிய விருது

பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் உடன்பிறந்த சகோதரரான பவன் கல்யாண் 1996 ஆம் ஆண்டு வெளியான "அக்கட அம்மாயி இக்கட அப்பாயி" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இவர் நடித்த "தோழி பிரேமா" என்ற படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருது வாங்கியது.

முன்னணியில் உள்ளது

முன்னணியில் உள்ளது

கோகுலம்லோ சீதா, சுஸ்வகதம், தோழி பிரேமா, தம்முடு, பத்ரி, குஷி, ஜல்சா, கபர் சிங் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளை வென்றுள்ள பவன் கல்யாணின் "அட்டாரின்டிகி தாரிதி" திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த தெலுங்கு திரைப்படங்களின் வரிசையில் இன்று வரை முன்னணியில் உள்ளது.

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில்

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில்

தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகர் பவன் கல்யாண் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருந்த நிலையில் தெலுங்கிலும் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரி குவித்தது.

மோஷன் போஸ்டரை

மோஷன் போஸ்டரை

இவ்வாறு தெலுங்கு திரைப்படத் துறையில் வசூல் சக்கரவர்த்தியாகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் இருந்துவரும் பவன் கல்யாண் அரசியலிலும் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரின் பிறந்த நாளையொட்டி இவர் நடித்துவரும் "வக்கீல் சாப்" படக்குழு இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

கன்னட ரீமேக்கில்

கன்னட ரீமேக்கில்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றுவரை திகழ்ந்து வரும் நடிகர் சுதீப், தமிழில் வெளியான பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்து புகழ்பெற்ற நடிகராக இன்றுவரை வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் முதல்முறையாக

தமிழில் முதல்முறையாக

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துள்ள சுதீப் தமிழில் முதல் முறையாக, எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான " நான் ஈ " திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.

ஹிந்தி திரைப்படங்களிலும்

ஹிந்தி திரைப்படங்களிலும்

நான் ஈ திரைப்படத்தை தொடர்ந்து புலி, பாகுபலி மற்றும் முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமாக உள்ள சுதீப் அதேசமயம் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இரு ஜாம்பவான்கள்

இரு ஜாம்பவான்கள்

இந்நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதியான இன்று கன்னடா மற்றும் தெலுங்கு திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் சுதீப் என இரு ஜாம்பவான்கள் இன்று ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வருவதால் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை திணறடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X