Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘தெறி‘ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன்...பவன் கல்யாணுக்கு மிரட்டல் கடிதம்!
ஆந்திரா : தெறி ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஒருவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அட்லி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜக்சன்,பிரபு, நைனிகா,மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் போலீசாக நடித்து மிரட்டி இருந்தார். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது.
லூசு
மாதிரி
கேள்வி
கேட்காத..
நீ
லூசு
மாதிரி
பேசாத..
விஜே
மகேஸ்வரியிடமே
எகிறிய
தனலட்சுமி..
தெறி
புரமோ

பவன் கல்யாண்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஒருவர், படத்தின் இயக்குநருக்கு தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார்.

ரசிகையின் புலம்பல்
அதில், நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை அப்படியிருக்கும் போது நான் தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை. ஆனால் தெறி ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக தகவல் வெளியானதை அடுத்தே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பவன் கல்யாண் அண்ணா நீங்கள் இதுபோன்ற ரீமேக் திரைப்படங்களில் நடிக்காமல், ஓர்ஜினல் படங்களில் நடியுங்கள் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

எங்கள் உற்சாகத்தை கொன்றுவிடும்
நீங்கள் அதிகமான ரீமேக் படங்களில் நடிக்கிறீர்கள் இது எங்களுக்கு வலியைத் தருகிறது. உங்களுக்கு இன்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். பவன் கல்யாணை யாரும் சரியாகக் கையாளவில்லை இந்தப் படம் 10 வருடங்கள் நினைவில் இருக்கும், ஆனால் நீங்கள் ரீமேக் செய்ய விரும்பினால் அது எங்கள் உற்சாகத்தைக் கொன்றுவிடும்.

தற்கொலை கடிதம்
என்னுடைய சாவிற்கு பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சாவுக்கு மைத்ரி மூவிஸ் மற்றும் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் தான் காரணம் என்றும் என்னுடைய உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்கள் என தற்கொலை கடிதத்தை நடிகர் பவன் கல்யாணுக்கு டெக் செய்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து, #WeDontWantTheriRemake என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.