பவர்ஸ்டார் சீனிவாசன் வங்கிக் கணக்கு, சொத்துக்கள் முடக்கம்

By Mayura Akilan

Power star Sreenivasan property seized by Police
சென்னை:மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் வங்கிக்கணக்கு, சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர்

கடன் வாங்கி தருவதாக பல லட்சங்கள் கமிஷன் பெற்று ஏமாற்றி விட்டார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகாராகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் சீனிவாசன் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனிவாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

இவருக்கு கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பலர் புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசை அதிகரிக்கவே இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு போலீசாரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X