கின்னஸ் சாதனை இயக்குநர் பாபுகணேஷ் இயக்கத்தில் பவர் ஸ்டார் நடிக்கும் 370

சென்னை: பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், கின்னஸ் புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ஃபிட்னஸ் ஸ்டார் மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 370.சமீப காலமாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து, பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி 370 திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கும். அதில் நிச்சயம் தேசிய ஒற்றுமை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை என்ற படத்திற்காக படத்தயாரிப்பில் மொத்தமுள்ள 14 பொறுப்புகளை ஏற்று அந்த படத்தை உருவாக்கியதால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த படம் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.

Power Star Srinivasan Acts new Film 370

நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து கடல்புறா திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்த பெருமைக்குரியவர் பாபு கணேஷ்.

இன்று பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து, பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கும். அதல் நிச்சயம் தேசிய ஒற்றுமை அதில் எதிரொலிக்கும்.

நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோ வீரராக நடிக்கிறார். 6 முறை மிஸ்டர் தமிழ்நாடு, 2 முறை மிஸ்டர் இந்தியா, 2 முறை மிஸ்டர் ஏஷியா, 2 முறை மிஸ்டர் வேர்ல்ட் நம்பர் 6 போன்ற பிட்னஸ் போட்டிகளில் வென்றவர்.

நாற்பது நாட்கள் செய்ய வேண்டிய அதிரடி படத்திற்கான படப்பிடிப்பை, 4 கேமராக்களை கொண்டு நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி சாதனை படைக்கவிருக்கிறார் இயக்குனர் பாபுகணேஷ்.

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது குழுவினர் தமிழ் சினிமாவில், இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்ட அதிரடி காட்சிகளை இப்படத்திற்காக அமைக்க உள்ளனர்.

பாபுகணேஷ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக, இயக்குனர் தானே தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு மற்ற நடிக, நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

மீண்டும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளான கின்னஸ், லிம்கா, ஆசியா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை இலக்காகக் கொண்டு களம் இறங்குகிறது 370.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X