மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பவர் ஸ்டார்… வைரலாகும் வீடியோ !

சென்னை : பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் பவர் ஸ்டார் வனிதா விஜயகுமாருடன் பிக்கப் ட்ராப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன்

நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான லத்திகா திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவர் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

இதையடுத்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற பல படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதையடுத்து அவர் காமெடி கதாப்பாத்திரம் மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தீவிர சிகிச்சை பிரிவில்

தீவிர சிகிச்சை பிரிவில்

தன்னை கேலி செய்து வரும் கமெண்டுகளை முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டு பிளஸ் ஆக்கினார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியை கடைபிடித்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

எந்த தகவலும் இல்லை

எந்த தகவலும் இல்லை

ஆனால், பவர் ஸ்டார் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ற எந்த தகவலும் அதில் இல்லை , கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஒருவேலை அந்த வீடியோதான் தற்போது பகிரப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டு ம் என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X