»   »  இவருக்கும்.. அதாவது "பவருக்கும்" ஆசை வந்துருச்சு போலிருக்கே....!

இவருக்கும்.. அதாவது "பவருக்கும்" ஆசை வந்துருச்சு போலிருக்கே....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராமத்துக் கிணற்றில் குதிப்பது போல இப்போதெல்லாம் பலரும் தொபீர் தொபீர் என அரசியலில் குதித்து அலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் என்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம் என்றாகி விட்டது.

இப்போது பவர் ஸ்டார் சீனிவாசன் கூட தனக்கும் அந்த ஐடியா இருப்பதாக பல் தெரிய கண் விரிய ஆவலுடன் கூறியுள்ளார்.

சீக்கிரமே அதைச் செய்தாலும் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார் பவர். தன்னை நம்பியுள்ள மக்களைக் காப்பாற்ற இந்த அரசியல் முடிவு என்று கூறி வேறு ஜெர்க் ஆக வைக்கிறார்.

ஸ்டார்டா.. பவர் ஸ்டார்டா:

ஸ்டார்டா.. பவர் ஸ்டார்டா:

இவர் எப்படி வந்தார், எங்கிருந்து வந்தார்.. ஏன் வந்தார் என்று கூட தெரியாத அளவுக்கு பவர் ஸ்டார் திடீரென முளைத்த நடிகர் ஆவார்.

படத்தை விட பில்டப்தான் ஜாஸ்தி ஓட்டம்

படத்தை விட பில்டப்தான் ஜாஸ்தி ஓட்டம்

இவர் நடித்த படங்களை விட இவர் செய்த பில்டப்புகள்தான் பெரிதாக பேசப்பட்டன. லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழக சினிமாவில் குதித்த பவர் ஸ்டார் இன்று தமிழின் தவிர்க்க முடியாத "சக்தி"யாக இருக்கிறார்.

எதுவுமே செய்யலையே

எதுவுமே செய்யலையே

இத்தனை பெயர், புகழ், அந்தஸ்து இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட் என்று சினிமாவில் சிவாஜி வசனம் பேசுவதைப் போல, தனது ரசிகர்களுக்கு எதுவும் செய்யலைய என்று வருத்தமாக இருக்கிறாராம் பவர்.

கோடி பேர் இருக்காங்க

கோடி பேர் இருக்காங்க

தமிழ்நாட்டில் மட்டும் இவருக்கு ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளதாக இவரது தரப்பு கூறுகிறது. மேலும் 1500 க்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும் விரைவில் நிறைய ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறுகிறது பவர் தரப்பு.

அடங்க மாட்டேங்குறாங்களே

அடங்க மாட்டேங்குறாங்களே

இவரது தீவிர ரசிகர்கள் கைகளில் சூடம் கொளுத்தியும், உனக்காக உயிரை எடுப்போம்.. ஸாரி... உயிரைக் கொடுப்போம் என்றும் தொடர்ந்து முழங்கி வருகின்றனராம். இந்த ஆவேசத்தையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் (நல்ல கால்குலேட்டரில்) அரசியல் முடிவுக்கு வந்தாராம் இந்த பவர் ஸ்டார்!

குதிச்சிருடா கைப்புள்ள

குதிச்சிருடா கைப்புள்ள

எனவே ஒரு படத்தில் வடிவேலு பெரிய கிணற்றில் டாமெரன்று குதிப்பது போல இவரும் அதாவது பவரும் சீக்கிரமே அரசியல் என்ற சமுத்திரத்தில் குதிக்கப் போகிறாராம்.

ஏற்கனவே எல்லாப் பயலும் நொந்து நூடூல்ஸ் ஆகி அந்து அவியலாகிக் கிடக்கிறான்.. இதுல பவர் வேற!

English summary
Power star srinivasan is willing to launch a new political party soon for the sake of his fans.
Please Wait while comments are loading...