அடிபைப்பில் தண்ணி அடிப்பது போல ... சிம்புவுக்குப் போட்டியாக பவர் ஸ்டாரின் 'டெரர் ஆந்தம்'...!
சென்னை: பவர் ஸ்டார் போகும் போக்கு எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. மற்றவர்கள் சந்தில் புகுந்தால் இவர் இண்டு இடுக்கில் புகுந்து பல் விரிய சிரித்து பயமுறுத்துகிறார்.
கலாய்ப்பதில் புதிய இலக்கணம் படைத்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், ஏற்கனவே தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது போல பேசி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது சிம்புவைப் பிடித்து வம்பு செய்ய ஆரம்பித்துள்ளார். சிம்புவே மற்றவர்களை கலாய்ப்பதில் நம்பர் ஒன் மன்மதன். ஆனால் இந்த மன்மதனுக்கே ஆப்பு வைக்க கிளம்பியுள்ளார் பவர் ஸ்டார்.

சிம்புவின் காதல் கீதத்திற்குப் போட்டியாக
சில மாதங்களுக்கு முன்பு லவ் ஆந்தம் என்ற பெயரில் ஒரு ஆல்பம் போட்டார் சிம்பு. பெரிய அளவில் இது ஹிட்டாகவில்லை. இந்த ஆல்பமே தனுஷின் கொலை வெறி பாடலுக்குப் போட்டியானதாக பார்க்கப்பட்டது. தற்போது சிம்புவுக்குப் போட்டியாக கிளம்பியுள்ளார் பவர் ஸ்டார்.

டெரர் லவ் ஆந்தம்
பவர் ஸ்டாரின் இந்தப் போட்டிப் பாட்டுக்குப் பெயர் டெரர் ஆந்தம்- ஓ கேர்ள் மை வேர்ல்ட் என்பதாகும்.

அழகன் அழகி படத்தில்தான் இந்த அக்கப்போர்
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கும் அழகன் அழகி படத்தில்தான் இந்த அக்கப் போராம். பவர் ஸ்டார் சீனிக்காக சில காட்சிகளை சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார் நந்தா பெரியசாமி.

பவரை வைத்து பவர் புல் பாட்டு
இந்த டெரர் ஆந்தம் பாடலில் கையில் கிதார் கூட நான்கு ஐந்து அழகிகள் என அதகளப்படுத்தியிருக்கிறார் பவர் ஸ்டார்.

எட்டு லட்சம் சம்பளத்திற்கு ஆட்டம்
முதல் காப்பி ரெடியான நிலையிலும், எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு பாட்டுக்கு அழகிகளோடு பவர் ஸ்டாரை ஆட வைத்திருக்கிறார் இயக்குநர் பெரியசாமி.

யூடியூபில் செம ஹிட்
தற்போது இந்த ஒற்றைப் பாடல் யூடியூபில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பல் விரிய பவர் ஸ்டார், கேர்ள்ஸுடன் ஆடிப் பாடும் இந்தப் பாடலை இதுவரை நிறையப் பேர் பார்த்து விட்டனர்.

அடிபைப்பில் தண்ணி அடிப்பது போல
இந்தப் பாடலில் பவர் ஆடிய ஆட்டம்தான் செம கரகாட்டம். அடி பைப்பில் தண்ணீர் அடிப்பார்களே அதுபோல..கிதாரைக் கையில் பிடித்தபடி முன்னும் பின்னும் அவர் போய் வரும் அழகே தனியாக இருக்கிறது...

காற்று பவர் பக்கம்...ஒன்னும் பண்ண முடியாது
இப்போது சினிமா காற்று சீனிவாசன் பக்கம் வீசுகிறது. எனவே யார் என்ன செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கிறது. கூடிய விரைவிலேய சந்தானம் உள்ளிட்டோரை ஓரம் கட்டினாலும் கட்டி விடுவார் போலிருக்கிறது... வைகைப் புயல் சீக்கிரம் வந்து வாரிச் சுருட்டும் வரை இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











