»   »  கலக்கல் பட்டாளத்துடன் பவர் களமிறங்கிய "ககபோ".. இன்று முதல்!

கலக்கல் பட்டாளத்துடன் பவர் களமிறங்கிய "ககபோ".. இன்று முதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் ஸ்டார், கருணாஸ், சுப்பு பஞ்சு, சிங்கம்புலி, மயில் சாமி என காமெடி நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ககபோ.

வடிவேலுவின் புகழ்பெற்ற வசனத்தை தலைப்பாக வைத்து தனது அறிமுக படத்தை பி.எஸ்.விஜய் இயக்கியிருக்கிறார். கேசவன் நாயகனாகவும், சாக்ஷி அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ளனர்.


Power Star Srinivasan's Kakapo Released Today

இது தவிர கருணாஸ், பவர் ஸ்டார், சுப்பு பஞ்சு, சிங்கம் புலி, மயில் சாமி, மதன் பாப், எம்.எஸ்.பாஸ்கர், வடிவுக்கரசி, அனுமோகன், ராஜஸ்ரீ, நிரோஷா, ஆதவன், ரோபோ சங்கர், சங்கிலி முருகன், மதுமிதா, சாண்டி என ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


Power Star Srinivasan's Kakapo Released Today

பவர் ஸ்டார் நடிப்பில் நேற்று அட்ரா மச்சான் விசிலு திரைப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியானது. தில்லுக்குத் துட்டு படத்துடன் வெளியான இப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் 'ககபோ' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா? என்பது கேள்விக்குறிதான்.

English summary
Power Star Srinivasan, Karunas Starrer Kakapo Released Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil