ததீங்கினத.. ததீங்கினத.. 'பவர் ஸ்டார்' சீனிவாசனின் லேட்டஸ்ட் 'லகலக'!

By Sudha

சென்னை: 'பவர் ஸ்டார்' என்றாலே 'பப்பளக்கா பப்ளிசிட்டிதான்' ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் 'பவர் ஸ்டார்' என்று தனக்குகத் தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பி வரும் டாக்டர் சீனிவாசன் லேட்டஸ்டாக லகலகா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.

எதற்கும் அஞ்சா சீனி

எதற்கும் அஞ்சா சீனி

டாக்டர் சீனிவாசன் = அஞ்சா நெஞ்சன் என்று டிக்ஷனரியில் புது மொழி போடும் அளவுக்கு எப்படிப்பட்ட கமெண்ட், விமர்சனம், கேலி, கிண்டல் என்றாலும் அஞ்சாமல் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் ஒரே நடிகர் சீனிவாசன்தான்.

புகழைக் கண்டு பொறாமையாம்

புகழைக் கண்டு பொறாமையாம்

தன்னைப் பார்த்து பலருக்கும் பொறாமை என்று சிரித்தபடி கூறும் சீனிவாசன், தான் சமீபத்தில் பண மோசடி வழக்கில் கைதானது கூட பொய் வழக்கு என்றும் எதிரிகளின் சதி என்றும் பேசுகிறார்.

போஸ் கொடுப்பதில் புதுப் புரட்சி

போஸ் கொடுப்பதில் புதுப் புரட்சி

விதம் விதமான போஸ்கள் கொடுத்து அதை பேஸ்புக்கிலும், வெளியிலும் வெளியிட்டு வெளுத்துக் கட்டுவதில் புதுப் புரட்சியை செய்து வருகிறார் சீனிவாசன். அவரது போஸ்களைப் பார்த்தால் அத்தனை பேருக்கும் ஆயிரம் சுனாமிகளை ஒரே விநாடியில் சந்தித்த அதிர்ச்சி ஏற்படும்.

டான்ஸ் .. உடான்ஸ்...

டான்ஸ் .. உடான்ஸ்...

அந்த வகையில் லேட்டஸ்டாக சீனிவாசன் வெளியிட்டுள்ள போஸ்தான் வித்தியாசமான டான்ஸ் மூவ்மென்ட் அடங்கிய போஸ். என்ன வகையான நடனம் என்று எப்படிப் பார்த்தாலும் புரியாத அளவுக்கு இதில் படு நூதனமான போஸைக் கொடுத்து பரவசமாக காட்சி தருகிறார் பவர் ஸ்டார்...

என்னைப் பார்த்து சிரித்தால் சந்தோஷம்தான்...

என்னைப் பார்த்து சிரித்தால் சந்தோஷம்தான்...

தன்னைப் பற்றி இன்டர்நெட்டில் போட்டுத் தாக்குவது குறித்து சற்றும் கவலைப்படவில்லையாம் சீனிவாசன். மாறாக, நான் பொழுதுபோக்குவாதி, மக்களை சந்தோஷப்படுத்தும் தொழிலில் இருப்பவன். எனவே இதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறுகிறார் வழக்கமான தனது குலுக்கல் சிரிப்போடு...

மன்னவா..சீக்கிரமா லட்டு தின்ன வா...!

மன்னவா..சீக்கிரமா லட்டு தின்ன வா...!

தற்போது சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வரும் சீனிவாசன், சந்தானத்துடன் சேர்ந்து காமெடியில் அதகளப்படுத்தி வருகிறாராம். படம் தனக்குப் பெரும் பிரேக்காக அமையும் என்றும் தொடையில் அடித்துக் கூறுகிறார்.

'போர்வீல்' பிஞ்சுக்காம இருந்தா சரித்தேன்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X