ரஜினி என்னைப் பாராட்டிட்டார்.. சீக்கிரம் அவரைச் சந்திப்பேன்! - பவரு பேட்டி

By Shankar

சென்னை: தன் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டிவிட்டதாகவும், விரைவில் அவரைச் சந்திப்பேன் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.

வழக்குகளில் சிக்கி கைது, கோர்ட்டு என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நான்கு வழக்குகளிலிருந்து ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "என் மீது நிறைய வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் பாதி பொய்யானவை. சினிமாவில் நான் வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை. பொறாமையால் என்னை சிக்க வைத்து விட்டார்கள்.

அன்பா பழகுவேன்

அன்பா பழகுவேன்

நிறைய பேரை நம்பி ஏமாந்து போனேன். எல்லோரிடமும் அன்பாக பாசமாக பழகுவேன். அதை வைத்து என்னை வீழ்த்தி விட்டார்கள். இனி கவனமாக இருப்பேன்.

சதி

சதி

எனக்கு பின்னால் சதி திட்டம் நடந்துள்ளது, அதை விரைவில் வெளியே கொண்டு வருவேன்.

வடிவேலுவுடன் போட்டியா?

வடிவேலுவுடன் போட்டியா?

காமெடியில் வடிவேலுக்கும் எனக்கும் போட்டி என்பதெல்லாம் சரியல்ல. அவர் எனக்கு முன்பே சினிமாவில் இருக்கிறார். இருவரும் காமெடி வேடங்களில் நடிக்கிறோம். ரசிகர்கள் யார் நடிப்பு பிடிக்கிறதோ அதை பார்ப்பார்கள்.

ரஜினியை சந்திப்பேன்

ரஜினியை சந்திப்பேன்

கண்ணா லட்டு திட்ட ஆசையா படம் பார்த்து ரஜினி என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். நிச்சயம் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

கோச்சடையானுடன்

கோச்சடையானுடன்

எனது ஆனந்த தொல்லை பட வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீசோ, அப்போதுதான் என் படமும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X