பவர் ஸ்டாரின் 'பூதாவதாரம்'!
பட்டணத்தில் பூதம் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள். அதில் பவர் ஸ்டார் சீனிவாசன்தான் பூதமாக நடிக்கப் போகிறாராம்.
ப்ளூக்கில் அடித்து வந்தது என்று சொல்வார்களே. அதற்கு சரியான உதாரணம் சீனிவாசன்தான். தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து, தனது பணத்தை செலவழித்து விளம்பரப்படுத்திக் கொண்டு வலம் வந்த பவர் ஸ்டார் இன்று முக்கிய நடிகராக நிஜமாகவே உயர்ந்து விட்டார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா ஓடினாலும் ஓடியது, இப்போது பவர் ஸ்டாருக்கு செம கிராக்கியாகி விட்டது. யாரைப் பார்த்தாலும் கூப்பிடு பவர் ஸ்டார் என்றுசொல்லும் அளவுத்து பார்ட்டி படு பிசியாக இருக்கிறார்.

பூதாவதாரம்
தற்போது பூதாவதாரம் எடுக்கிறார் பவர் ஸ்டார். அதாவது பட்டணத்தில் பூதம் படத்தின் ரீமேக்கில் பூதம் கேரக்டரில் நடிக்கப் போகிறாராம்.

காமெடியும், மாயாஜாலமும்
ஜெய்சங்கர் நாயகனாக நடிக்க உருவான படம்தான் இந்த பட்டணத்தில் பூதம். நகைக்சுவை மற்றும் மாயாஜாலம் என இரண்டையும் கலந்து கொடுத்து எடுக்கபப்ட்ட படம் இது.

பவர்தான் பூதம்
இப்படத்தில் பூதம் கேரக்டரில் நடிக்க சரியானவர் என்று இயக்குநர் மணிகண்டன் தீர்மானித்து அவரையே ஒப்பந்தம் செய்து விட்டாராம். இந்த மணிகண்டன்தான், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கியவர்.

நாயகன் சிவா
ஜெய்சங்கர் நடித்த ஹீரோ வேடத்தில் சிவா நடிக்கப் போகிறாராம். ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கிரேஸி மோகன் வசனம் - தேனப்பன் தயாரிப்பு
கிரேஸி மோகன்தான் இந்தப் படத்தின் வசனத்தை எழுதப் போகிறார். தேனப்பன் தயாரிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











