சூப்பர் ஸ்டார் என்றால் யார் தெரியுமா?: பவர் ஸ்டார் விளக்கம்
சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய்க்கு பட்டம் சூட்ட உள்ள நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் ஸ்டார் கோதாவில் குதித்துள்ளார்.
திடீர் என்று ஒரு நாள் கோலிவுட்டுக்கு வந்து நான் தான் ஹீரோ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் சீனிவாசன். தனக்கு தானே பவர் ஸ்டார் பட்டம் கொடுத்துக் கொண்டார்.
அவர் கூறியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கண்ணா லட்டு
பவர் ஸ்டாரை தமிழகத்தில் உள்ள அனைவர் மத்தியிலும் பிரபலமாக்கியது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான்.

சந்தானம்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவரை ஓவராக கலாய்த்திருந்தது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

காமெடி பீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி என்றால் அது இந்த பவர் தான் என்று அவர் மார்தட்டி கூறியதை பலரும் காமெடியாக எடுத்துக் கொண்டு சிரித்தனர்.

சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய பவரை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

வேறு வேலை இல்லை
இந்த பவருக்கு வேறு வேலை இல்லை, எப்பொழுது பார்த்தாலும் இப்படி தான் காமெடியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்று அனைவரும் நினைத்தனர்.

ரசிகர்கள்
யாருக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளார்களோ அவர் தான் சூப்பர் ஸ்டார். நான் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் எனக்கு அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். மேடைகளில் நான் பேசினால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள் என்கிறார் பவர்.

ரசிகைகள்
கல்லூரி விழாக்களுக்கு நான் சென்றால் மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா என்று தெரிவித்துள்ளார் பவர் ஸ்டார்.

குட்டீஸ்
பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை அனைவருக்கும் என்னை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு ரசிகர்கள், ரசிகைகள் ஏராளம் என்று கூறுகிறார் பவர்.

லிங்கா
ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தை அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்றால் அது பவர் தான் என்பதை நிரூபிக்க அவர் தனது ஆனந்த தொல்லை படத்தையும் லிங்கா ரிலீஸாகும் நாளே வெளியிடுகிறாராம்.

போங்க பவர்
பவர், நீங்கள் இப்படி சீரியஸாக தம்கட்டி பேசியதையும் ரசிகர்கள் காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications











