பவருக்கு கிடைத்த முருங்கைக்காய்.. சீனி ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை : முருங்கைக்காய் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

நடிகர் பவர் ஸ்டாரை நாம் பல படங்களில் காமெடி நாயகனாக பார்த்து ரசித்து இருப்போம். இவர் பேர் சொல்ல முடியாத பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் இவர் சினிமாவை நம்பி 30 முதல் 40 கோடி ரூபாய் பணத்தை இழந்ததாக கூறினார். இந்த விஷயம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பான செய்தியாக மாறியது.

Powerstar is the hero again in the movie Murungakkai

தற்போது அதை பற்றிய விளக்கத்தை அளித்துள்ள பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் தான் முதலில் லத்திகா படம் தயாரித்து நடித்ததன் மூலம் சினிமாவில் நுழைந்ததுமே 3 கோடி ரூபாயை இழந்தேன் என்று கூறியுள்ளார்.மேலும் அடுத்தடுத்து ஐந்து படங்களை தயாரித்ததாகவும் அதில் அனைத்து படங்களும் தோல்வி அடைய அதிலிருந்து 30 முதல் 40 கோடி பணத்தை இழந்தேன் என்று பவர்ஸ்டார் கூறியுள்ளார் .

மேலும் சினிமாவில் வந்த புதிதில் பலரும் பயங்கரமாக பில்ட்அப் கொடுத்து என்னை மொட்டை அடித்து விட்டார்கள் என்று வருத்ததுடன் கூறினார். மேலும் சினிமாவில் பல நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பி ஏமாந்துவிட்டேன் ஆனால் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நான் தவறான ஆட்களை தேர்வு செய்து விட்டேன் என்று கூறினார் .

Powerstar is the hero again in the movie Murungakkai

2018ல் பவர்ஸ்டார் பலரால் கடத்த பட்டார் இந்த தகவல் அந்த சமயங்களில் பெரிய பரபரப்பு செய்தியாக அனைவராலும் பேசப்பட்டது. மேலும் தற்போது என்னை அன்றைக்கு கடத்தியது யார் என்று தெரிந்து விட்டது இது அனைத்திற்கும் ஒரு பெண் தான் காரணம் . கூடிய விரைவில் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

Powerstar is the hero again in the movie Murungakkai

பவர்ஸ்டார் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அவருக்கு பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாலா படங்கள் ஒரு வருட கால அவகாசத்தில் எடுக்கப்படும் நிலை இருந்ததால் அவர் படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டதாக கூறினார் .

ஆனால் தற்போது பவர்ஸ்டார் பாலாவின் உதவி இயக்குனர் ஒருவரின் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார் நீண்ட நாட்களுக்கு பின் நாயகனாக நடிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு முருங்கக்காய் என்று தலைப்பு வைத்துள்ளதாக பவர்ஸ்டார் கூறினார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X