பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை
Recommended Video

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் சிறைக்கும் அப்படி ஒரு பொருத்தமாக உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளனர். அதுவும் கழிப்பிட வசதி இல்லாத சிறை.

வழக்குகள்
மோசடி வழக்குகளில் சிக்கி திஹார் சிறை வரை சென்று வந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சிறைக்கு சென்றோமே என்று கவலைப்படாமல் எனக்கு அங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்று ஜாலியாக கூறியவர். போலீஸ்காரர்கள் எல்லாம் என் நண்பர்கள் என்றார்.

சிறை
மோசடி வழக்குகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் படங்களில் ஜாலியாக ரவுசு செய்து கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். இந்நிலையில் அவர் செல்லும் பிக் பாஸ் வீட்டிலும் சிறை உள்ளது.

கலாய்
பவர் ஸ்டாரை விடாமல் துரத்துகிறது சிறை. ஒரு வேளை தான் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதால் தானோ என்னவோ சிறை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார் பவர்ஸ்டார்.

மகிழ்ச்சி
பிக் பாஸ் வீட்டில் பவர் ஸ்டாரை சிறையில் அடைத்தாலும் அவர் வருத்தப்பட மாட்டார். மாறாக ஜாலியாக எடுத்துக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைப்பார். பவருக்கு சிறைக்கு செல்வது எல்லாம் ஜுஜுபி.

எதிர்பார்ப்பு
படத்திலேயே ஹீரோயினை சுத்தி சுத்தி வந்து என்னை எல்லாம் பார்க்காமலேயே பிடிக்கும் என்று கூறுவார் பவர். பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு பன்ச் டயலாக் பேசப் போகிறாரோ என்ற ஆவல் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











