ரீலீஸ் ஆகும் முன்பே நெட்டில் வெளியான பவர் ஸ்டார் பவன் கல்யாண் படம்..

By Mayura Akilan

ஆந்திரா பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த அத்தரின்டிக்கி தாரெடிதிரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'கபார் சிங்' படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து 'அத்தரின்டிக்கி தாரெடி' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள்.

தெலுங்கானா பிரச்சினை

தெலுங்கானா பிரச்சினை

ஆகஸ்ட் 9ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் தெலங்கானா பிரச்சினை வலுவானதால், அங்கு எந்த படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டு தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை

தேவி ஸ்ரீ பிரசாத் இசை

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது.

தசாராவில் ரிலீஸ்

தசாராவில் ரிலீஸ்

பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

உடனடி ரிலீஸ்

உடனடி ரிலீஸ்

அத்தரின்டிக்கி தாரெடி' முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் உடனடியாக படத்தினை செப்டம்படர் 27ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி

அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி

1996ஆம் ஆண்டு வெளியான ‘அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி' என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோவாக டோலிவுட்டில் அறிமுகமானவர் பவன் கல்யாண்.

பவர் ஸ்டார் பட்டம்

பவர் ஸ்டார் பட்டம்

இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ‘ஜானி' என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியிருக்கிறார். தெலுங்கு திரையுலகில் பவன் கல்யாணுக்கு பவர் ஸ்டார் பட்டம் கொடுத்து அழகு பார்க்கின்றனர் ரசிகர்கள்.

டுவிட்டரில் அலறல்

டுவிட்டரில் அலறல்

படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில் ‘அத்தரின்டிக்கி தாரெடி' படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். பைரசி லிங்குகளை [email protected] மற்றும் [email protected] என்ற இமெயில் முகவரி அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்" என்று கூறியுள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X