நாங்க மாத்தி, மாத்தி முத்தம் கொடுத்துப்போம், ஆனால் கள்ளத்தொடர்பு இல்லை: பவர் ஸ்டார்

By Siva

Recommended Video

முத்தம் கொடுத்துப்போம், கள்ளத்தொடர்பு இல்லை: பவர் ஸ்டார்-வீடியோ

சென்னை: ராஜாவுக்கு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காமெடியாக பேசுவதற்கு பெயர் போனவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சிறைக்கு சென்று வந்ததையே கெத்தாக சொன்ன மனிதர். அவரை சினிமா நிகழ்ச்சிகளில் பேச அதிக அளவில் அழைக்கிறார்கள்.

இந்நிலையில் ராஜாவுக்கு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார் பேசியதாவது,

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ராஜாவுக்கு ராஜா இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் ராஜாக்கள் தான். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் யாரும் சாதாரண ஆள் இல்லை. தயாரிப்பாளர் என் நெருங்கிய நண்பர். துபாயில் தொழில் செய்கிறார். அவர் தமிழ் படத்தை தயாரித்ததை பாராட்டுகிறேன். என் தம்பி விநாயக் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.

விநாயக்

விநாயக்

விநாயக் சொன்னது அனைத்தும் பொய். யாரும் நம்பாதீர்கள். என்னை அழைத்தது உண்மை தான். அப்பொழுது நான் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்தேன். அங்கே அட்வான்ஸ் வாங்கிவிட்டு இங்கு எப்படி நடிக்க முடியும்?. அவருக்கு நான் சித்தப்பா தான். மூன்று பாடல்களிலுமே முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரு படம் என்று சொல்லியிருந்தால் நான் நிச்சயம் வந்திருப்பேன்.

முத்தம்

முத்தம்

அவனே நடிக்கிறான், அவனே டான்ஸ் ஆடுகிறான், அவனே முத்தம் கொடுக்கிறான். இது எல்லாம் ரொம்ப அநியாயம். அவனுக்கு தலையில் இருந்து கால் வரைக்கும் மச்சம் தான். இந்த படத்தில் வில்லியாக நடித்துள்ள சிந்துவும், நானும் வேறு ஒரு படத்தில் முக்கியமான காட்சியில் நடித்தோம். அந்த காட்சியை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது.

ஆண்கள்

ஆண்கள்

ஷூட்டிங்ஸ்பாட்டில் ரியாஸ் எனக்கு முத்தம் கொடுப்பார், நான் அவருக்கு முத்தம் கொடுப்பேன். தப்பாக நினைக்க வேண்டாம். இது கள்ளத்தொடர்பு எல்லாம் இல்லை. நட்பு மட்டுமே. சோனா ஒரு சிறந்த நடிகை. எந்த இடத்திலும் அட்ஜஸ்ட் பண்ணும் உடன் பிறப்பு அவர். நிறைய விஷயம் பேசணும். ஆனால் பேசினால் பேப்பரில் வந்துவிடும். இந்த ஆண்டு ஆண்களுக்கு டைம் சரியில்லை என்றார் பவர் ஸ்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X