முதல்வரை முத்தமிட்ட பவர் ஸ்டார்
சென்னை: தமிழ் திரையுலகத்தின் பிஸி நாயகனான பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பரபரப்பை கிளப்பி, தன் பவரை காண்பிப்பதில் பவர்ஸ்டாருக்கு இணை அவரே தான்.

கைவிட்ட லத்திகா...
அறிமுகப்படம் லத்திகாவை சிரமப்பட்டு ஓட வைத்த பெருமையுடன் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் பவர்.

லட்டில் வந்த பவர்...
'கண்ணா லட்டு தின்ன ஆசையா?' பவரின் பப்ளிசிட்டி ஆசையை நிறைவேற்றியது.

சரக்கு வச்சிருக்கேன்...
பிரபல இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடிக்கும் புதிய படம் 'நான் சரக்கு நீ ஊறுகாய்'.

புதுவையில்...
இதன் படப்பிடிப்பு புதுச்சேரி தலைமை செயலகம் அருகே நடந்து வருகிறது.

தலைமைசெயலகத்தில் பவர்...
புதுச்சேரி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தலைமை செயலகத்திற்குள் விறுவிறுவென சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார்.

முத்தம் தர ஆசையா... ஆசையா...
முதல்வரை சந்தித்த போது பவர் ஸ்டார் திடீரென ரங்கசாமியின் கையை பற்றி முத்தமிட்டிருக்கிறார்.

சால்வை மரியாதை...
பிறகு சால்வை அணிவித்து முதல்வருக்கு பவர் மரியாதை செய்தார்.

அரண்ட முதல்வர்...
பவரின் நடவடிக்கைகளை பார்த்து மிரண்டுபோனாராம் ரங்கசாமி.


Click it and Unblock the Notifications











