கண்ணா லட்டு தின்ன ஆசையா டிக்கெட்டுடன் வந்தா சிகிச்சை ஃப்ரீ: பவர்ஸ்டார் ஆஃபர்

By Siva

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்த பாதி டிக்கெட்டுடன் வருபவர்களுக்கு தனது மருத்துவமனையில் சிகிச்சை இலவசம் என்று அறிவித்துள்ளார் பவர்ஸ்டார்.

பவர்ஸ்டார் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் டாக்டர் ஸ்ரீனிவாசன் சென்னையில் மருத்துவமனை வைத்துள்ளார். மருத்துவமனைக்கு தனது மகள் லத்திகாவின் பெயரை வைத்துள்ளார். தான் நடித்த முதல் படத்திற்கு தனது செல்ல மகள் லத்திகாவின் பெயரைத் தான் வைத்தார்.

பவர் தமிழகமெங்கும் புகழ்பெறக் காரணம் ஃபேஸ்புக். ஃபேஸ்புக் போனாலே பவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி இருக்கும். அப்படி பிரபலமான பவரை இன்று தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ரெடியாக இருக்கின்றனர். இந்நிலையில் தனது படங்களை ஓட வைக்க பவர் பண்ணும் ட்ரிக்கே தனி. அது என்ன என்று பார்ப்போம்.

லத்திகா டிக்கெட்டுடன் வந்தால் சிகிச்சை ஃப்ரீ

லத்திகா டிக்கெட்டுடன் வந்தால் சிகிச்சை ஃப்ரீ

தான் நடித்த லத்திகா படத்தை ஓட வைக்க ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டினரார் பவர். கூட்டத்தை இழுக்க பிரியாணி கூட கொடுத்தார். மேலும் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு பாதி டிக்கெட்டுடன் வரும் ரசிகர்களுக்கு தனது மருத்துவமனயில் சிகிச்சை இலவசம் என்று அறிவித்தார். இதையடுத்து அவரது படமும் ஓடியது. மருத்துவமனையிலும் கூட்டம் அலைமோதியது.

கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கும் ஒரு ஆஃபர்

கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கும் ஒரு ஆஃபர்

தன்னை சந்தானம் ஓட்டு ஓட்டு என்று ஓட்டிய கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த பாதி டிக்கெட்டுடன் வந்தால் தனது மருத்துவமனையில் சிகிச்சை இலவசம் என்று அறிவித்துள்ளார் பவர்.

ரசிகர்களுக்கு சிகிச்சை

ரசிகர்களுக்கு சிகிச்சை

பவர்ஸ்டார் கோலிவுட்டில் மவுசு இருக்கையிலேயே சம்பாதித்து தனது மருத்துவமனைகளின் கிளைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும் தனது ரசிகர்களுக்கான சிகிச்சையையும் தொடரவிருக்கிறாராரம்.

ஸ்டார்களுக்கும் சிகிச்சை

ஸ்டார்களுக்கும் சிகிச்சை

தனது மருத்துவமனைக்கு திரைநட்சத்திரங்களை அழைத்து வர பவர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தனது மருத்துவமனையில் சிகிச்சை பெரும் திரை நட்சத்திரங்களுக்கு மருத்துவ செலவில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி வேறு செய்யப்போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X