பால் கொட்டியிருக்கு.. உள்ளாடை கழண்டு இருக்கு.. பெட்ல பவர் ஸ்டார்.. என்ன டைட்டில் தெரியுமா?

சென்னை: கொஞ்ச நாளா கோலிவுட்டை விட்டு எஸ்கேப் ஆகியிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அட்டகாசமான ஒரு புதுப்பட அப்டேட்டுடன் திரும்ப வந்துள்ளார்.

மருத்துவராக இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா படத்தை தயாரித்து இயக்கி நடிகராக அறிமுகமானார்.

சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி ரோலில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வேற லெவல் பிரபலம்

வேற லெவல் பிரபலம்

தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, ஆர்யா சூர்யா, யா யா, தலைவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஷங்கரின் ‘ஐ', வாலிப ராஜா என வரிசை கட்டி பல படங்களில் நடித்து வந்தார்.

சந்தானம் உதவியால்

சந்தானம் உதவியால்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகராக பவர் ஸ்டார் சீனிவாசனை அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம், தொடர்ந்து தனது பல படங்களில் நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்று ஒரு தனி இடத்தையும் பெற்றுத் தந்தார்.

மோசடி வழக்குகள்

மோசடி வழக்குகள்

சினிமா, அரசியல் என டக்கு டக்குன்னு அடுத்த அடுத்த லெவலுக்கு பறந்து கொண்டிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், திரைப் படங்களுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கொஞ்ச காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த அவர், மீண்டும் நான் திரும்ப வந்துட்டேன் என சொல்லும் அளவுக்கு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முருங்கக்காய்

முருங்கக்காய்

இயக்குநர் ஆர்.எஸ். மணி இயக்கத்தில், ஹீரோவாக மீண்டும் கலக்க உள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த படத்திற்கு ‘முருங்கக்காய்' என்ற விவகாரமான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பால்சொம்பு கொட்டிக் கிடக்க, புடவை, உள்ளாடை அவிழ்ந்து கிடக்க, பஞ்சு மெத்தையில் பவர் ஸ்டார் முதலிரவு கோலத்தில் படுத்துக் கிடக்கும் பக்காவான போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

போட்டியா காப்பியா

போட்டியா காப்பியா

சமீபத்தில் சாந்தனு, பாக்கியராஜ், அதுல்யா ரவி நடிப்பில் முருங்கக்காய் சிப்ஸ் என்ற டைட்டிலில் சாந்தனுவின் புதுப்பட போஸ்டர் இதே போன்ற லுக்கில் முருங்கக்காயை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இந்நிலையில், தற்போது டைட்டில் மற்றும் போஸ்டரை அப்படியே காப்பி அடித்தது போல இந்த லுக் வெளியாகி இருக்கிறது. இது போட்டியா? அல்லது காப்பியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X